காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி சுற்றுலா பயணிகள் மீதான தீவிரவாத தாக்குதலில் 26 கொல்லப்பட்டு, பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில், தமிழகத்தைச் சேர்ந்த மூவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலை அடுத்து காஷ்மீரில் உள்ள சுற்றுலா பயணிகள் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு வருகின்றனர். இந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, இண்டிகோ, ஏர் இந்தியா மற்றும் ஸ்பைஸ்ஜெட் ஆகிய விமான நிறுவனங்கள் நேற்று (புதன்கிழமை) ஸ்ரீநகரில் இருந்து 7 கூடுதல் விமானங்களை […]
சென்னை : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இன்று (ஏப்ரல் 24, 2025) டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்தத் தாக்குதல் குறித்து மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் மற்றும் நாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்து விவாதிக்கப்படவுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஏப்ரல் 23, 2025 அன்று அதிமுக […]
சென்னை : பச்சை முட்டை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுவது மயோனைஸ். இதனை மக்கள் சிக்கன் சாப்பிடுவதில் இருந்து ப்ரெட் ஆம்ப்லேட் சாப்பிடுவது வரை அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், ஒரு சில இடங்களில் மயோனைஸ் சரியான முறையில் தயார் செய்யப்படவில்லை என்றும்…ஒரு சில இடங்களில் பழைய மயோனைஸ் திரும்ப பயன்படுத்தப்பட்டு வருவதால் உடல் நிலைகுறைபாடு ஏற்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. எனவே, மையோனைஸுக்கு ஓராண்டு தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முறையற்ற வகையில் […]
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில், பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அரசு வெளியிட்ட தகவலின்படி, இந்த தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் உட்பட 17 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு உலக அரசியல் தலைவர்கள் வரை கண்டனங்கள் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக […]
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை வெளியான தகவலின் படி மொத்தம் 26 பேர் உயிரிழந்ததாகவும் அதில், 20 க்கும் மேற்பட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள், இரண்டு உள்ளூர் மக்கள், ஒரு எமிரேட் மற்றும் ஒரு நேபாள நாட்டவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கலை தெரிவித்து கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள். தாக்குதல் சம்பவம் நடந்ததை தொடர்ந்து பிரதமர் […]
சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக நேற்று சில மாட்டவங்களில் மழை பெய்தது. குறிப்பாக தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்தது. அதனைத்தொடர்ந்து இன்று 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு. அதைபோல், 24-04-2025 முதல் 28-04-2025 வரை தமிழகத்தில் ஒரிரு […]
சென்னை : டாஸ்மாக்கில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். இந்த ஊதிய உயர்வு, டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியாளர்களுக்கு பயனளிக்கும். இம்மாதம் 1ம் தேதியில் இருந்து இந்த ஊதிய உயர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக்கில் 6,567 மேற்பார்வையாளர்கள், 14,636 விற்பனையாளர்கள் மற்றும் 2,426 உதவி விற்பனையாளர்கள் இதன் முலம் […]
சென்னை : இந்தியாவில் IAS, IPS, IFS, IRS ஆகிய சிவில் சர்வீஸ் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த 2024 ஜூன் மாதம் (Prelims) மற்றும் செப்டம்பர் 2024 (முதன்மை தேர்வு) ஆகியவை நடைபெற்றது. பிறகு 2025 ஜனவரியில் நேர்காணல் நடைபெற்று அதற்கான முடிவுகள் இன்று (ஏப்ரல் 22) வெளியாகியுள்ளது. அதில், மொத்தம் 1009 பேர் அகில இந்திய அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். பொதுப்பிரிவை சேர்ந்தவர்கள் 335 பேரும், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பை சேர்ந்த EWS பிரிவில் […]
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு, சாதி சான்றிதழ்களில் உள்ள பெயர் முரண்பாடுகளால் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்ப்பதற்கும், சமூகநீதி மற்றும் ஆவணங்களின் ஒருமைப்பாட்டை உறுதி செய்யும் நோக்கில் வழங்கப்பட்டது. சாதி சான்றிதழ்கள் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் அரசு நலத்திட்டங்களில் இட ஒதுக்கீடு மற்றும் சலுகைகளைப் பெறுவதற்கு அவசியமான ஆவணமாகும். இந்த சான்றிதழ்கள் […]
உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு ஆளுநர் மாளிகை செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநரிடம் இருந்து பறிக்கும் மசோதா அண்மையில் சட்டமான நிலையில் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கரை அழைத்து துணைவேந்தர்கள் மாநாடு நடத்துகிறார் ஆர்.என்.ரவி. இதில், மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும், 4ஆம் ஆண்டாக […]
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்ற நிலையில், இன்று எரிசக்தித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகள் உட்பட 100 வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என உறுதியளித்து பேசினார். இது குறித்து பேசிய அவர் ” நான் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் […]
சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று போராட்டங்கள், உண்ணாவிரதங்கள் நடத்தி வருகின்றனர். இந்தத் திட்டம் அரசு ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பிந்தைய நிதி பாதுகாப்பை உறுதி செய்தாலும், அரசுக்கு நிதிச்சுமையை ஏற்படுத்தியது. இதனால், 2004 முதல் தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension System – NPS) அறிமுகப்படுத்தப்பட்டு, பழைய திட்டம் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பழைய […]
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடிய நிலையில், கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து முதல்வர்.மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பாக பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு வரும் ஏப்ரல் 29 முதல் மே 5 வரை ஒரு வார காலத்திற்கு தமிழ் வார விழா கொண்டாடப்படும் என அறிவித்தார். இது குறித்து அவர் பேசுகையில் ” பாரதிதாசனை போற்றும் வகையில் சட்டப்பேரவையில் நான் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியீடுகிறேன். பாவேந்தர் பாரதிதாசன் […]
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதற்கு அந்த துறையை சேர்ந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்து பேசினார். அதனைத்தொடர்ந்து இன்று, சட்டசபையில் இன்று, எரிசக்தித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடக்க உள்ளது. விவாதத்திற்கு பதில் அளித்து, அமைச்சர் செந்தில் பாலாஜி, தன் துறையின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார். கத்தோலிக்க […]
சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, 17ம் தேதி முதல் இரு பட்ஜெட்டுகள் மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்றது. இதனையடுத்து, 24ம் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, புனித வெள்ளியையொட்டி கடந்த 18ம் தேதி அரசு விடுமுறை என்பதால், சட்டப்பேரவை கூடவில்லை. தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் […]
கடலூர் : தமிழ்நாட்டில் 2026-ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து, பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் வியூக நகர்வுகளை செயல்படுத்தி வருகின்றனர். எப்போதும் தனித்தே தேர்தல் களம் காணும் நாம் தமிழர் கட்சி இந்த முறையும் தனித்து தான் போட்டி என அறிவித்து அதற்கான தேர்தல் பணிகளில் அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈடுபட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று கடலூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாங்கள் இதுவரை வாக்குக்கு பணம் கொடுத்து வாக்கு பெற்றதில்லை. […]
சென்னை : சென்னை விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் திட்டமிட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படுவதால் அப்பகுதி கிராமத்தில் உள்ள விவாசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது என ஏகனாபுரம் உள்ளிட்ட பகுதி கிராம மக்கள் 2 வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய், பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு […]
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும் கருத்து மோதல் ஏற்பட்டது. இதில் இருவரும் காரசாரமாக தங்கள் கருத்துக்களை முன்வைத்து வந்தனர். இன்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சியான அதிமுக உறுப்பினர்களை பார்த்து, ” நீட் தேர்வை யார் கொண்டு வந்தது? என எதிர்க்கட்சி தலைவர் கேட்டுக்கொண்டு இருக்கிறார். நீட் கொண்டு வந்த பிறகு, தற்போது அதனை சரி செய்ய உங்களுக்கு ஒரு […]
சென்னை : கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (88) காலமானார். நிமோனியா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வந்த போப் பிரான்சிஸ், புனித வெள்ளி பிரார்த்தனையில் கூட கலந்துகொள்ளவில்லை. இதனால், அவரின் உடல்நிலை மீண்டும் மோசமானதாக கூறப்பட்ட நிலையில், இன்று காலை 7:35 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக வாடிகன் அறிக்கை வெளியிட்டுள்ளது. போப் பிரான்சிஸ் மறைவுக்கு உலகம் முழுவதும் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இவரது மறைவுக்கு பிரதமர் மோடி முதல் தமிழ்நாடு அரசியல் […]
நாகர்கோவில் : கடந்த 2014ஆம் ஆண்டு கன்னியாகுமரி மேற்கு பகுதியில் உள்ள மிடாலம் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த அரசு புறம்போக்கு நிலத்தை அரசு அதிகாரிகள் மீட்க சென்றபோது ஏற்பட்ட தகராறில் அரசு அதிகாரிகள் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில், தற்போதைய கன்னியகுமாரி கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவும், தமிழ்நாடு காங்கிரஸ் சட்டப்பேரவை குழுத் தலைவருமான ராஜேஷ்குமார் உட்பட 6 பேர் மீது அப்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கானது நாகர்கோவில் முதன்மை உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று […]