அதிமுகவில், ஓபிஎஸ் ஐயா இன்றி ஓர் அணுவும் அசையாது என போஸ்டர் ஒட்டிய அதிமுக தொண்டர்கள். கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் என தனி தனியாக பிரிந்து ஆலோசனை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன் பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில், அதிமுக பொதுக்குழு கூட்டம் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில், வரும் 11-ஆம் தேதி பொதுக்குழு நடைபெற […]
10 ஆண்டுகளில் அதிகபட்சமாக 2018ல் தான் 15 காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் அதிகபட்சமாக 2018ல் தான் 15 காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் தெரிவித்துள்ளார். மேலு, இதுகுறித்து அவர் கூறுகையில், 10 ஆண்டுகளில் 80 காவல் நிலைய மரணங்கள் ஏற்பட்டாலும், 12 மரணங்கள் மட்டும்தான் போலீசாரால் நிகழ்ந்துள்ளன. 2021 இல் நான்கு மரணங்கள், 2022-ல் 2 காவல் நிலைய மரணங்கள் மட்டுமே […]
கரூரில் இன்று, திருமாநிலையூரில் ரூ.581 கோடி மதிப்பிலான 99 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பதவியேற்றது முதல், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று, முடிந்த நலத்திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். இந்த நிலையில், அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக கரூர் மற்றும் நாமக்கல்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில், கரூரில் இன்று, திருமாநிலையூரில் […]
தமிழ்நாட்டிற்கு ஆதரவு கேட்க வரும் குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஆதரிக்க வருமாறு தமிழ்நாடு பாஜக சார்பில் அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்மு கூட்டணிக் கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோர இன்று சென்னை வருகிறார். தமிழ்நாட்டிற்கு ஆதரவு கேட்க வரும் குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஆதரிக்க வருமாறு தமிழ்நாடு பாஜக சார்பில் அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் என்று பொதுவாக சொல்லி எடப்படி பழனிசாமி பெயரை […]
சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 உயர்ந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,792-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மத்திய அரசு தங்கத்தின் மீதான அடிப்படை இறக்குமதி வரியை 7.5 சதவீதத்திலிருந்து 12.5% ஆக உயர்த்தி உள்ளது. இதனால், தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த நேற்று தங்கம் விலை அதிகரித்திருந்த நிலையில், இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 […]
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை தந்து தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கலாம் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. அரசு பள்ளிகளில் 13,331 தற்காலிக ஆசிரியர் நியமனம் குறித்து பள்ளிக்கல்வித்துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. உயர்நீதிமன்ற கிளையின் அறிவுறுத்தலை திறந்து திருத்திய வழிகாட்டுதல் நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை தந்து தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கலாம், இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாக பணியாற்றி வந்தவர்களை ஆசிரியர்களாக நியமிக்கலாம், […]
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வலியுறுத்தலின் பெயரில் ஜூலை 4-ஆம் தேதி சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர் கடந்த ஒரு ஆண்டில் 2.26 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 132 நிறுவனங்களுடன் செய்த ஒப்பந்தத்தால் மேலும் 90 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். 38 நிறுவனங்களுடன் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கோவை மற்றும் […]
தமிழகத்தில் உள்ள அணைகளை பாதுகாக்க மாநில அணை பாதுகாப்பு அமைப்பை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள அணைகளை பாதுகாக்க மாநில அணை பாதுகாப்பு அமைப்பை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. மத்திய அரசின் அணை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மாநில அணை பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மண்டலங்களின் தலைமைப் பொறியாளர்கள் உட்பட 15 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த மைப்பு, அணையின் பாதுகாப்பு, நீர் வருகை, நீர் […]
டந்த அதிமுக ஆட்சியில் கூட்டுறவுத்துறையில் நடந்த ரூ.750 கோடி மோசடி தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி. திண்டுக்கல்லில் கூட்டுறவு துறை சார்பாக கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டார். இந்த நிகழ்வுக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் 5 கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், திமுகவின் ஒருவருட ஆட்சியில் 33 கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. […]
முதன்மை மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களின் நம்பிக்கையை ஓ.பி.எஸ். இழந்துவிட்டார் என ஈபிஎஸ் மேல்முறையீட்டு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, கடந்த 23-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், அந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும், ஈபிஎஸ் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், அதிமுக பொதுக்குழு உட்கட்சி செயல்பாடு விவகாரத்தில் உயர்நீதிமன்றம் தலையிட்டு இருப்பது சட்டத்திற்கும், […]
நூபுர்சர்மாவின் இழிசெயலை உச்சநீதிமன்றம் கண்டித்திருப்பது நீதித்துறையின் மீதான நம்பிக்கையைத் துளிர்விடச் செய்கிறது என திருமாவளவன் ட்வீட். நுபுர் சர்மா தன் மீதான வழக்குகளை டெல்லிக்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், சர்மாவின் பேச்சுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது குறித்து, நீதிபதிகள் கூறுகையில், நுபுர் சர்மா மற்றும் அவரது வார்த்தைகள் ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கி உள்ளது. உதய்பூரில் நடந்த படுகொலைக்கு நுபுர் […]
உலகில் 110 நாடுகளுக்கு மேலாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் பேட்டி. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தொற்று பாதிப்பு குறித்தும் அதை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று உயர் அதிகாரியுடன் ஆலோசனை மேற்கொண்டார். […]
ஈபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கட்சிப் பொறுப்பை அதிமுக தலைமை நிலையச் செயலாளர் என்று மாற்றியுள்ளார். கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் என தனி தனியாக பிரிந்து ஆலோசனை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன் பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில், அதிமுக பொதுக்குழு கூட்டம் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில், வரும் 11-ஆம் தேதி பொதுக்குழு […]
அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் ட்வீட். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தொழில் புரிய எளிதான மாநிலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார். இந்த பட்டியலில் தொழில் புரிய எளிதான மாநிலங்கள் பட்டியலில் 14 இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு தமிழ்நாடு முன்னேறியுள்ளது. பட்டியலில் டாப் சாதனையாளர்கள் பிரிவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப், குஜராத், தெலுங்கானா மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன. இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர், பக்கத்தில், […]
அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக கரூர் மற்றும் நாமக்கல் செல்கிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பதவியேற்றது முதல், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று, முடிந்த நலத்திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். இந்த நிலையில், அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக கரூர் மற்றும் நாமக்கல் செல்கிறார்.
சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.107 உயர்ந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,785-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொதுவாக தங்கத்தில்தான் பெரும்பாலான பெண்கள் முதலீடு செய்வார்கள். இதனால்,தங்கத்தின் விலையை பெண்கள் எப்போதும் உற்று நோக்குவதுண்டு. இந்த தங்கம் விலை அதிகரித்த நிலையில், தங்கம் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.107 உயர்ந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,785-க்கு விற்பனை செய்யப்படுகிறது. […]
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட். இன்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘நமது மாண்புமிகு துணைத் ஜனாதிபதி வெங்கையா நாயுடு அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் இன்னும் பல்லாண்டு காலம் நம் நாட்டிற்கு சேவை செய்ய வாழ்த்துகிறேன். எந்தவொரு சூழ்நிலையிலும் நேர்மை, விவேகம் மற்றும் […]
பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதை தடுக்க பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்ததையடுத்து, க கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதை தடுக்க பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். இது குறித்து அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், பள்ளி வளாகத்திற்குள் நூறு விழுக்காடு கொரோனா தடுப்பு […]
மருத்துவர் தின வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட். இன்று தேசிய மருத்துவர் தினம் அனுசரிக்கப்படும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மருத்துவர் தின வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘ஏழை மக்களுக்கு அன்புள்ளத்தோடு சிகிச்சை அளித்ததோடு, விடுதலைப் போராட்டத்திலும் பங்கெடுத்து, பின்னாளில் மேற்கு வங்க முதலமைச்சராக உயர்ந்த மருத்துவர் பி.சி.ராய் அவர்களின் பிறந்தநாளான இன்று தேசிய மருத்துவர் தினம். பிணிநீக்கி நம் உயிர்காக்கும் மருத்துவர்களைப் போற்றிடுவோம்!’ என பதிவிட்டுள்ளார். ஏழை […]
சென்னை தியாகராயர் நகரில் உள்ள ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் வாங்கிய ரூ.15 கோடி மதிப்பிலான பினாமி சொத்துக்களை முடக்கும் பணியில், வருமானவரித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2017-ஆம் ஆண்டு, வருமானவரித்துறையினர் சசிகலாவிற்கு சொந்தமான 180 இடங்களில் வருமானவரித்துறை சோதனை மேற்கொண்டது. இந்த சோதனையில், அவர்கள் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்ததும், கணக்கில் வராமல் பலகோடி சொத்துக்கள் சேர்த்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கடந்த 5 வருடமாக பினாமி சொத்துக்கள் தொடர்பாக ஆவணங்களை […]