தமிழகத்தில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது தொடர்பாகவும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நேற்றைய நிலவரப்படி, தமிழகத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது தொடர்பாகவும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், […]
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.இந்த நிலையில்,41-வது நாளாக எந்த மாற்றமுமில்லாமல் பெட்ரோல்,டீசல் விலை தொடர்கிறது.அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனினும்,பெட்ரோல் விலை எப்போது சதத்தை விட்டு குறையும் என்று வாகன ஓட்டிகளால் எதிர்பார்க்கப்படுகிறது. அதைப்போல,இன்று டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.96.72 மற்றும் […]
ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தமிழகத்தில் வைத்து மதுரையில் கூட்டம் நடைபெறும் என நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளது குறித்து சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட். ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தமிழகத்தில் வைத்து மதுரையில் கூட்டம் நடைபெறும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் கூட்டத்தை மதுரையில் நடத்த வேண்டும் என அழைப்பு விடுத்த நிலையில் அவருடைய அழைப்பை […]
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக ஆதரவு கோரினார் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா. நாட்டின் குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவிக் காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.இதனால்,குடியரசுத் தலைவர் தேர்தல் வருகின்ற ஜூலை 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.அதன் முடிவுகள் ஜூலை 21-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு,டெல்லியில் என்சிபி தலைவர் சரத் பவார் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவை நிறுத்த ஒருமனதாக […]
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி. வரிகள் உடனடியாக திரும்ப பெறப்பட வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல். உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி. வரிகள் உடனடியாக திரும்ப பெறப்பட வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் எடுத்துள்ள முடிவு. ஏழை எளிய. நடுத்தர மக்கள் மீது பெரும் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. விதி விலக்குகளை நீக்குதல் (Removal of exemptions) என்ற பெயரில் அன்றாடம் […]
உயிரைக் காக்கும் மருத்துவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம். கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல். சேலம் மாவட்டம் மேட்டூரில், மக்களின் உயிரைக் காக்கும் அரசு மருத்துவர்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து மநீம கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், மக்களின் உயிரைக் காக்கும் அரசு மருத்துவர்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்டம் மேட்டூரில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இரண்டாம் நாளாக தொடரும் […]
அதிமுகவில், எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கியதே பாஜக தான் என நயினார் நாகேந்திரன் பேட்டி. கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் என தனி தனியாக பிரிந்து ஆலோசனை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன் பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில், அதிமுக பொதுக்குழு கூட்டம் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில், வரும் 11-ஆம் தேதி பொதுக்குழு நடைபெறும் எனக் கூறப்படுகிறது. […]
அதிமுகவை செயல்படாத நிலைக்குக் கொண்டு செல்வதற்கான அனைத்துப் பணிகளையும் செய்துவிட்டு, தற்போது இப்படி ஒரு கடிதத்தை எனக்கு அனுப்புவது ஏற்புடையதாக இல்லை என ஈபிஎஸ் கடிதம். அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஓபிஎஸ் அவர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களை நிரப்புவதற்கான தற்செயல் தேர்தல்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் […]
தமிழகம் முழுவதும் உள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி, யுகேஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கையை தொடங்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு ஏற்கனவே, ங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி, யுகேஜி வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி, யுகேஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கையை தொடங்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 3 வயது குழந்தைகளை எல்.கே.ஜி-யிலும், 4 மற்றும் அதற்க்கு மேல் உள்ள குழந்தைகளை யுகேஜி-யிலும் சேர்க்குமாறு […]
எனக்கு எதற்காக விளம்பரம், இனிமேலும் எனக்கு விளம்பரம் தேவையா? 55 ஆண்டுகாலம் அரசியலில் இருக்கக்கூடியவன் நான். இதற்கு மேல் எதற்கு எனக்கு விளம்பரம்? என முதல்வர் கேள்வி. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்வில் உரையாற்றிய அவர், அமைச்சர் காந்தி அவர்களை புகழ்ந்து பேசினார். […]
தற்காலிக ஆசிரியர் பணிநியமனத்திற்கான பணிகளை நிறுத்துமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த வாரம் பள்ளிக்கல்வித்துறை அரசுப்பள்ளிகளில் 13 ஆயிரத்து 391 ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்வதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் பணியாற்றும் தன்னார்வலர்கள், அதேபோன்று ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென்றும், பள்ளிகளில் இருக்கக்கூடிய பள்ளி நிர்வாகக்குழுவே மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. பள்ளி நிர்வாகக்குழுவினர் தாங்கள் விரும்பக்கூடியவர்களை தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வதாக கல்வித்துறைக்கு புகார்கள் வந்துள்ளது. […]
தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் மூலம், தகுதியற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது எனஉயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் அறிவுறுத்தல். தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நியமிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்த நிலையில், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா, தகுதியற்றவர்கள் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் […]
ஓ.பன்னீர்செல்வத்தின் கடிதத்தை எடப்பாடி பழனிசாமி ஏற்க மறுப்பு. உள்ளாட்சி தேர்தல் வேட்பாளரின் படிவத்தை அனுப்ப கோரி ஈபிஎஸ்-க்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களை நிரப்புவதற்கான தற்செயல் தேர்தல்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எதுவாக படிவம் A மற்றும் படிவம் B ஆகியவற்றை எனக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.’ என தெரிவித்திருந்தார். ஆனால், ஓ.பன்னீர்செல்வத்தின் கடிதத்தை எடப்பாடி பழனிசாமி […]
முதல்வர் மு.க.ஸ்டாலின் ராணிப்பேட்டையில் உள்ள அரசு ஆதரவற்ற குழந்தைகள் விடுதியில் ஆய்வு மேற்கொண்டார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ராணிப்பேட்டையில் உள்ள அரசு ஆதரவற்ற குழந்தைகள் விடுதியில் ஆய்வு மேற்கொண்டார். முதல்வரின் ஆய்வின் போது, விடுதி கண்காணிப்பாளர் விடுதியில் இல்லா. இதனையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஆய்வின் போது பணியில் இல்லாத விடுதி கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஜூலை 11-ஆம் தேதி கூடும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கும் கோரிக்கையை விசாரிக்க முடியாது என உயர்நீதிமன்றம் திட்டவட்டம். ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும் அ.தி.மு.க பொதுக்குழு உறுப்பினரான சண்முகம், உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘ கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளை பொதுக்குழு மூலமாக நீக்க முடியாது. இவர்கள் இருவரும் சேர்ந்து விதிகளை திருத்தினால் மட்டுமே சாத்தியமாகும். கடந்த 23 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் உயர் நீதிமன்ற […]
உதய்பூர் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து திருமாவளவன் ட்வீட். விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள், உதய்பூர் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து திருமாவளவன் அவர்கள் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், உதய்ப்பூர் கண்ணையா லால் படுகொலை எதிர்வினை பயங்கரவாதக் கொடுங்குற்றமாகும். அதிதீவிர சனாதன பயங்கரவாதிகளின் வெறுப்பு அரசியலில் சிக்கிய ஒரு அப்பாவியை மதத்தின் பெயரால் இவ்வாறு படுகொலை செயதிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. இஸ்லாத்தின் பெயரால் நடக்கும் இதுபோன்ற கொடூரங்களை இஸ்லாமியச் சமூகம் ஒருபோதும் ஏற்காது என்பதை அறிவோம். நுபுர் […]
நிர்மலா சீதாராமன் அவர்கள், ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தமிழகத்தில் வைத்து மதுரையில் கூட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி கவுன்சிலின் 47வது கூட்டம் சண்டிகரில் 2 நாட்கள் நடைபெற்றது. இந்த கூட்டமானது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல்வேறு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி அதிகரிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. […]
அதிமுகவைப் பொறுத்தவரை,பொதுவாக தேர்தலில் இரட்டை சின்னத்தில் நிற்க வேண்டும் என்றால் ஓபிஎஸ்,ஈபிஎஸ் ஆகிய இருவருமே பார்ம் ஏ மற்றும் பார்ம் பி-யில் கையெழுத்திட வேண்டும் என்ற சூழல் உள்ளது.ஆனால்,தற்போது அதிமுகவுக்குள் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த சூழலில்,ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள இரண்டு மாவட்ட கவுன்சிலர்,20 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள்,40 ஊராட்சி தலைவர்கள்,436 கிராம ஊராட்சி உறுப்பினர்கள்,மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள இரண்டு மாநகராட்சி கவுன்சிலர்கள்,இரண்டு நகராட்சி கவுன்சிலர்கள்,8 பேரூராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட […]
நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் ஜமதக்கனி செய்த தியாகங்களும், படைத்த சாதனைகளும் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை என ராமதாஸ் ட்வீட். இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளாகம் கட்டி முடிக்கப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் இன்று திறக்கப்படவுள்ள நிலையில், அந்த வளாகத்திற்கு விடுதலைப் போராட்ட வீரரும், அறிஞருமான ஜமதக்கனியின் பெயர் சூட்டப்படுவது வளாகத்திற்கு கூடுதல் பெருமை சேர்க்கும் என டாக்.ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளாகம் கட்டி முடிக்கப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் இன்று […]
எதிர்க்கட்சி குடியரசு தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா,தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று சந்தித்து ஆதரவு கோர உள்ளார். நாட்டின் குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவிக் காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.இதனால்,குடியரசுத் தலைவர் தேர்தல் வருகின்ற ஜூலை 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.அதன் முடிவுகள் ஜூலை 21-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு,டெல்லியில் என்சிபி தலைவர் சரத் பவார் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவை […]