நாளை எதிர்கட்சி குடியரசு தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து, ஆதரவு கோர உள்ளார். நாட்டின் குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவிக் காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.இதனால், குடியரசுத் தலைவர் தேர்தல் வருகின்ற ஜூலை 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதன் முடிவுகள் ஜூலை 21-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. டெல்லியில் என்சிபி தலைவர் சரத் பவார் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக […]
அலுவலகத்தில் பணிபுரியும் அனைவரும் முழு நேரமும் முறையாக முக கவசம் அணிந்து இருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என்றும் மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அலுவலகத்தில் பணிபுரியும் அனைவரும் முழு நேரமும் முறையாக முக கவசம் […]
நடிகர் சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட். அறிவியல் பிரிவில் உறுப்பினராக நடிகர் சூர்யாவுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆஸ்கர் விருது குழுவில் முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை நடிகர் சூர்யா பெற்றுள்ளார். இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நடிகர் சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘தனது தேர்ந்த நடிப்பாற்றலுக்கும்; சமூக அக்கறை கொண்ட கதைத்தேர்வுகளுக்கும் மாபெரும் அங்கீகாரமாக, ஆஸ்கர் விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு […]
அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தனக்கு கொரோனா தொற்று ஏதும் உறுதி செய்யப்படவில்லை என விளக்கம். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மனைவி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் வைத்தியலிங்கத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் அவர்கள் […]
கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017-இல் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக,முக்கிய குற்றவாளி கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில்,கேரளாவைச் சேர்ந்த சயான்,வாளையார் மனோஜ் உள்பட 10 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்து இருந்தனர்.இவர்கள் இப்போது ஜாமீனில் உள்ளனர்.அதே சமயம்,திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கோடநாடு வழக்கு தொடர்பாக கடந்தாண்டு ஜூலை மாதம் முதல் தனிப்படை போலீசார் நடத்தி வரும் மேல் விசாரணை தீவிரமடைந்தது. இந்த வழக்கில் விசாரணை நடத்தக் கோவை மேற்கு மண்டல […]
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,தமிழகத்தில் நீலகிரி,கோயம்புத்தூர்,திருப்பூர்,தேனி,திண்டுக்கல்,ஈரோடு,கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.மேலும்,தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதைப்போல,நாளையும் தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்,நீலகிரி,கோயம்புத்தூர்,திருப்பூர்,தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு […]
முகக்கவச விழிப்புணர்வில் ஈடுபட்ட சென்னை மேயர் பிரியா தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. அதன்படி 1,400 க்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் முகக் கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மீறினால் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மேயர் பிரியா அவர்கள் முகக் கவசம் அணிவது தொடர்பான விழிப்புணர்வு […]
அரசு வேலைவாய்ப்பில் 3 ஆம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு வேலைவாய்ப்புகளில் 3 ஆம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று 3 ஆம் பாலினத்தவரான சுதா என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.மேலும், உச்சநீதிமன்றம் தங்களுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ள நிலையில்,மாநில அரசும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தனது மனுவில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில்,சென்னை உயர்நீதிமன்ற […]
ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து,பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் உள்ளிட்ட 4 பேர் ஏற்கனவே போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதனைத் தொடர்ந்து,சிறுமியின் கருமுட்டை விற்பனை தொடர்பான வழக்கில்,சேலம், ஓசூர் மருத்துவமனைகளுக்கு ஈரோடு காவல்துறை சம்மன் அனுப்பியிருந்தது. மேலும்,ஒவ்வொரு மருத்துவமனையிலும் விசாரணை நடைபெற்று வரும் நிலையில்,சிறுமியின் வாக்குமூலத்தையடுத்து ஆந்திரா,கேரளா மருத்துவமனைகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அதன்பின்னர்,கருமுட்டை விற்பனை வழக்கில் விசாரணை விரைந்து நடைபெற்று வருகிறது என்றும் விசாரணை முடிந்து அறிக்கை அளித்த […]
அதிமுக உட்கட்சி தேர்தல் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற நிலையில் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்,இணை ஒருங்கிணைப்பாளராக ஈபிஎஸ் ஆகியோர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.ஆனால்,இதனை எதிர்த்து வழக்கு தொடர அனுமதிக்க கோரி கே.சி.பழனிசாமி மகனான சுரேன் பழனிசாமி, ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னதாக மனுதாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது:தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பின்,அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் உருவாக்கப்பட்டது,கட்சியின் விதிகளுக்கு எதிரானது என்றும், ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளருக்கு கட்சியின் […]
ஊழலுக்கு வழிவகை செய்யும் தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்தை கைவிட வேண்டும் என விஜயகாந்த் அறிக்கை. தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வது என்ற அரசின் முடிவு கடும் கண்டனத்துக்குரியது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு […]
அதிமுக முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன் கடந்த 2016-21 ஆம் ஆண்டு வரை உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.11.32 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக,அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது மட்டுமல்லாமல் அவரது மனைவி மல்லிகா,மகன்கள் சசி மோகன்,சந்திர மோகன்,மருமகள் வைஸ்னவி ஆகியோர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறையால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.அதன்பின்னர்,லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டிருந்த போது கேபி அன்பழகன் பெயரிலும்,அவரது உறவினர் பெயரிலும் பல கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகள் குவித்திருப்பது […]
ஜிஎஸ்டி கவுன்சில் முடிவுகள் மத்திய, மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதனால், இந்த முடிவை தமிழக அரசு எதிர்க்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் ட்வீட். அரிசி, பருப்பு உள்ளிட்ட பொட்டலத்தில் அடைத்து விற்பனை செய்யப்படும் வணிக முத்திரையற்ற (Unbranded) உணவுப் பொருட்களுக்கு வரிவிலக்கு ரத்து செய்யப்பட்டு, 5% ஜி.எஸ்.டி வரி விதிக்க வேண்டும் என்று ஜி.எஸ்.டி கவுன்சில் பரிந்துரைத்திருப்பது கவலை அளிப்பதாக, இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் அன்புமணி […]
இந்தியாவில் அமைதியும் நல்லிணக்கமும் நிலவுவதற்கு மத வெறுப்புப் பிரச்சாரம் வேரறுக்கப்பட வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் ட்வீட். சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பாஜக செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா,இஸ்லாமிய இறைத் தூதர் நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் சில சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாக புகார் எழுந்தது.இது சர்வதேச அளவில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்த விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையான நிலையில்,இஸ்லாமிய நாடுகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் […]
ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த வைத்திலிங்கத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் என தனி தனியாக பிரிந்து ஆலோசனை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன் பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில், அதிமுக பொதுக்குழு கூட்டம் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த வைத்திலிங்கத்திற்கு கொரோனா தொற்று உறுதி […]
தமிழக மின்சார வாரிய ஊழியர்கள் கட்டாயம் சீருடை விதிகளைக் பின்பற்ற வேண்டும் எனவும்,இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக,வெளியிடப்பட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: “தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகக் கையேட்டில் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஆடைக் குறியீடு இன்றைய சூழ்நிலைக்கு ஏற்றவாறும் அலுவலகத்தின் அலங்காரத்தைப் பேணும் வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும்.அந்த வகையில்,மின்சார வாரிய பணியின் போது பெண் ஊழியர்கள் சேலை,சல்வார்,சுடிதாருடன் துப்பட்டா அணிந்து பணியாற்றலாம். அதே சமயம்,மின்சார வாரிய ஆண் ஊழியர்கள் […]
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.இந்த நிலையில்,39-வது நாளாக எந்த மாற்றமுமில்லாமல் பெட்ரோல்,டீசல் விலை தொடர்கிறது.அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனினும்,பெட்ரோல் விலை எப்போது சதத்தை விட்டு குறையும் என்று வாகன ஓட்டிகளால் எதிர்பார்க்கப்படுகிறது. அதைப்போல,இன்று டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.96.72 மற்றும் […]
நாடு முழுவதும் தற்பொழுது மீண்டும் கொரோனா தொற்று பரவல் பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வருகின்றது.அந்த வகையில்,தமிழகத்திலும் சென்னை,கோயம்புத்தூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் குறிப்பாக நகர்ப்புறங்களில் அதிகரித்து வருகின்றது.இதனால்,பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களிடமும்,கொரோனா வழிமுறைகளை முறையாக கடைபிடிக்காதவர்கள் மீதும் தற்போது நடைமுறையிலுள்ள தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939-இன் படி அபராதம் விதிக்கப்படும் என்றும் தமிழக அரசு முன்னதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில்,காதாரம்,வருவாய்,காவல்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பொதுமக்கள்,நிறுவனங்கள் கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்யுமாறு […]
தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டு சங்கம் மூலம் சிறந்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையினை 50 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும்,இது தொடர்பாக அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: “ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டுப் பணி அமைப்பு நிதி (Corpus Fund) மூலம் கிடைக்கும் வட்டித்தொகையிலிருந்து 10 ஆதிதிராவிடர்பழங்குடியினர்,மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் மற்றும் ஆதிதிராவிடர் அல்லாத இனத்தைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர் உள்ளிட்ட […]
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அரசின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இன்று திருப்பத்தூர்,வேலூர் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார்.அதன்படி,இன்று காலை 9 மணிக்கு திருப்பத்தூர் மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலக வளாகத்தை முதல்வர் திறந்து வைக்கவுள்ளார்.இதனைத் தொடர்ந்து,டான் போஸ்கோ பள்ளியில் நடைபெறும் அரசு விழாவில், முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து,புதிய திட்டப்பணிகளுக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார். அதன்பின்னர்,அரசின் நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கி முதல்வர் உரையாற்றவுள்ளார். இதனையடுத்து,நண்பகல் 12.15 மணிக்கு வேலூர் மாவட்டத்தில் புதிய நகர பேருந்து […]