சென்னை : வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி கடற்கரையில் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அத்துடன் புயல் கரையை கடக்கும்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், புயல் காற்றுக்கும் வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசியத் தேவை தவிர இதர பணிகளுக்காக வெளியில் வருவதைத் கண்டிப்பாக தவிர்த்து பாதுகாப்பாக வீடுகளில் இருக்குமாறு ஏற்கனவே தமிழக அரசு அறிவுறுத்தலை வழங்கி […]
சென்னை : சென்னையின் முக்கியமான மின்சார மையமான மணலி துணை மின் நிலையத்தில் (செப்டம்பர் 12, 2024) இரவு மின்சாரம் வழங்கும் இரண்டு மின்னூட்டி ஆதாரங்களும் இயக்கத்தில் இருந்த போதும் எதிர்பாராத விதமாக ஒரு மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக, மணலி துணை மின்நிலையத்திற்கு மின்சாரம் வழங்கும் இரண்டு 400 கிலோ வோல்ட் மின் ஆதாரங்களின் (அலமாதி மற்றும் NCTPS II) அடுத்தடுத்த மின்தடைக்கு வழிவகுத்தது, ஒரு ஜம்பர் துண்டிப்பும் கண்டறியப்பட்டது. தீ உடனடியாக […]
சென்னை : மணலி துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, சென்னையில் முழுவதுமாக பல இடங்களில் நேற்று இரவு மின்தடை ஏற்பட்டு இருளில் மூழ்கியது . திடீரென நேற்று நள்ளிரவு மின்தடை சென்னை முழுவதும் ஏற்பட்டதன் காரணமாக, மக்கள் மின்நிலையத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், அலமாதி மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் இரட்டை மின் ஆதாரங்கள் செயலிழந்ததால் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது எனவும், போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு மின் விநியோகம் சீரமைக்கப்பட்டது எனவும் […]
தூத்துக்குடி : நாளை (ஆகஸ்ட் 20-08-2024) செவ்வாய்க்கிழமை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி அது எந்தெந்த இடங்கள் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது, பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, 1-ம் கேட், 2-ம் கேட் பகுதிகள், மட்டக்கடை, வடக்கு பீச் ரோடு, ரெயில்வே ஸ்டேசன் ரோடு, எட்.டயபுரம் ரோடு, தெப்பக்குளம் தெரு, சிவன்கோவில் தெரு, வ.உ.சி. ரோடு, ஜெயிலானி தெரு, […]
மின்வாரியம் : தமிழகத்தில் நேற்று (ஜூலை-16) குடியிருப்புகள் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு மின்சார ஆணையம் நேற்று அறிவித்தது. அதன்படி 4.83% சதவீதம் வரை மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், இந்த உத்தரவு ஜூலை-1 ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வீடுகளுக்கான மின் இணைப்பில் 400 யூனிட்டுகள் வரை பயன்படுத்தி வருவோருக்கு இதற்கு முன் ஒரு யூனிட்டுக்கு ரூ.4.60 வசூலிக்கப்பட்டது. தற்போது அதனை ரூ.4.80 வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். அதிகபட்சமாக […]
சென்னை : மாநில மின் பயன்பாட்டு நிறுவனமான தமிழ்நா மின்சார வாரியத்தை, தமிழ்நாடு பவர் ஜெனரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் தமிழ்நாடு கிரீன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் என இரண்டாக பிரிக்க மத்திய எரிசக்தி துறை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, ஒன்று, தமிழ்நாடு பவர் ஜெனரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் TNPGCL ஆகவும், மற்றொன்று தமிழ்நாடு கிரீன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் TNGECL ஆகவும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TANDGEDCO : தமிழக மின்சார வாரியத்தில் தற்போது இன்ஜினீயரிங் படித்த பட்டதாரிகளுக்கு அசத்தலான வேலைவாய்ப்பை தற்போது மின்சார வாரியத்தின் துணை நிறுவனமான தமிழ்நாடு மின் பகிர்மான அதாவது TANGEDCO 500 காலியிடப்பணிகளை அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கான முழு விவரங்களையும் தற்போது பார்க்கலாம். காலியிட விவரங்கள் : பட்டம் பணியிடங்கள் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் (EEE ) 395 எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினீரிங் (ECE ) 22 எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன் இன்ஜினியரிங் (EIE) 9 […]
சென்னை : தமிழகத்தில் ஜூலை 1ஆம் தேதி முதல் மின்சாரப் பயன்பாட்டுக் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக வெளியான தகவல்களுக்கு தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழுமறுப்பு தெரிவித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாக வெளியான தகவல் குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு (TN Fact Check) விளக்கம் கொடுத்துள்ளது. அதாவது, ஜூலை 1ஆம் தேதி முதல் மின்சாரப் பயன்பாட்டுக் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக ஒரு பொய்யான தகவல் கடந்த சில நாட்களாக […]
சென்னை : தமிழக மின்சார வாரியம் தற்போது தமிழ்நாடு மின் நுகர்வோருக்கு ஒரு வித்தியாசமான கோரிக்கையை முன்வைத்துள்ளது. தமிழக மின்சார வாரியம் (TANGEDCO) கடந்த சில நாட்களுக்கு முன்பு மின் கட்டணம் செலுத்தும் முறையை எளிதாக்குவதற்கு இனி பயனர்கள் அதிகம் பயன்படுத்தும் வாட்ஸ்அப் (WhatsApp) செயலி மூலம் மின் கட்டணத்தை செலுத்தி கொள்ளலாம் என்ற வசதியை அறிமுகம் செய்தது. மேலும், இது 500 யூனிட் அளவுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு மட்டுமே இப்படி வாட்ஸ் அப் செயலி […]
சென்னை: மின் சேவைகள் பற்றியும் அறியவும், விண்ணப்பிக்கவும் புதிய இணையதள முகவரியை TANGEDCO அறிவித்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியமான TANGEDCO தலைமையின் கீழ் tangedco.org எனும் இணையதளம் செயல்பட்டு வருகிறது. இதில் மின்சார வாரியம் தொடர்பான செய்திகள், மத்திய மாநில அரசுகளின் மின் திட்டங்கள், இணைப்பு பெற விண்ணப்பங்கள் என பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த tangedco.org இணையத்தளமானது பல்வேறு சேவைகளை வழங்குவதால் அதில் ஒரு லிங்கை கிளிக் செய்தால் அது இன்னொரு லிங்கை திறக்கும் […]
சென்னை: வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு மின் நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்த்தும் மின்சார அளவீட்டின்படியான கட்டணத்தை நேரடியாக அந்தந்த பகுதி மின்சார அலுவலகத்திலோ, அல்லது GooglePay, PhonePe போன்ற ஆன்லைன் பேமெண்ட் செயலிகள் மூலமாகவோ செலுத்திக்கொள்ள முடியும். தற்போது அதனை மேலும் எளிதாக்க, பயனர்கள் அதிகம் பயன்படுத்தும் வாட்ஸ்அப் (WhatsApp) செயலி மூலம் மின் கட்டணத்தை செலுத்தி கொள்ளலாம் என்ற வசதியை தமிழாடு மின்சார வாரியம் […]
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் வழங்கி அத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். அதன்படி, புயல் பாதித்த மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த டிசம்பர் 18ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அமைச்சரின் பதிவில்,கடந்த 3ம் தேதி தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக வலுவெடுத்து 4ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக […]
மின் கட்டணம் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படுவதாக குறுஞ்செய்தி வந்தால் கவனமாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபத்தில், தமிழகத்தில் மின் கட்டணம் கட்டவில்லை என்றும் மின் இணைப்புத் துண்டிக்கப்படும் எனவும் குறுஞ்செய்தி அனுப்பி, அதில் லிங்கை க்ளிக் செய்ய வைத்து மக்களிடையே மோசடி செய்யும் சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகின்றனர். இந்த நிலையில், மின் கட்டணம் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற குறுஞ்செய்தி போலியானது என தமிழக மின்சார வாரியம் […]
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க update செய்யப்பட்ட புதிய Link வெளியீடு. தமிழ்நாட்டில மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் மின் கட்டணம் செல்லும் அலுவலகங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இம்மாதம் இறுதி வரை ஆதார் எண்ணை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நேற்று வரை 2.66 கோடி மின் இணைப்புகள் உள்ளன. தற்போது வரை சுமார் 60 லட்சம் மின் இணைப்புகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மின் இணைப்புகள் ஆதார் என்னுடன் இணைக்கும் பணிகள் […]
தமிழக மின்சாரத்துறையில் காலியாக உள்ள கள உதவிப்பணியாளர் பணிகளில் முதற்கட்டமாக 8 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மின்சாரத்துறையான டான்ஜெட்கோவில் காலியாக பணியிடங்களை நிரப்ப கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாட்டிருந்தது. 2016ஆம் ஆண்டு மின்சார துறை காலிப்பணியிடங்க்ளில் 900 பணியிடங்கள் மட்டுமே நிரப்பட்டன. 2500 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. கள உதவி பணியாளர்கள் காலிப்பணியிடங்கள் அப்படியே இருக்கிறது என அந்த வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்து. இது குறித்து, சென்னை உயர்நீதிமன்ற அமர்வு கூறுகையில், […]
தமிழக மின்சார வாரிய ஊழியர்கள் கட்டாயம் சீருடை விதிகளைக் பின்பற்ற வேண்டும் எனவும்,இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக,வெளியிடப்பட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: “தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகக் கையேட்டில் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஆடைக் குறியீடு இன்றைய சூழ்நிலைக்கு ஏற்றவாறும் அலுவலகத்தின் அலங்காரத்தைப் பேணும் வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும்.அந்த வகையில்,மின்சார வாரிய பணியின் போது பெண் ஊழியர்கள் சேலை,சல்வார்,சுடிதாருடன் துப்பட்டா அணிந்து பணியாற்றலாம். அதே சமயம்,மின்சார வாரிய ஆண் ஊழியர்கள் […]
மின்சார வாரியத்தில் கேங்மேன் பணி குறைகளை களைய குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.அதன்படி,கேங்மேன் பணிக்கு தேர்ச்சி பெற்றும் பணி நியமனம் பெறாத 5,493 பேரின் பிரச்னைகளை களைய வாரிய செயலாளரை தலைவராக கொண்ட குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கேங்மேன் பதவியில் உள்ள காலியிடங்களை 5000 லிருந்து 10000 ஆக உயர்த்தி கேங்மேன் (பயிற்சி) நேரடி ஆட்சேர்ப்புக்கான ஆணைகள் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளன.அதன்படி, 15,106 தேர்வர்களில் 9,613 பேர் இடஒதுக்கீடு விதியை பின்பற்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். […]
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ்,பயனாளிகளின் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வுகாண கண்காணிப்பு அதிகாரி நியமனம் செய்து மின்சார வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக,வெளியிடப்பட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: “உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்படி,தனி CM ஹெல்ப்லைன் (1100) உருவாக்கப்பட்டுள்ளது.அதில் பெறப்படும் புகார் மனுக்களை 100 நாட்களுக்குள் தீர்வு காண அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து புகார் மனுக்களையும் உடனே தீர்த்து வைப்பதற்காக, TANGEDCO இன் அனைத்து விநியோக வட்டங்களிலும் தலைமையகங்களிலும் கண்காணிப்பு பொறியாளர் தரத்தில் ஒரு நோடல் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். […]
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கும், இந்திய மரபுசாரா எரிசக்தி மேம்பாட்டு நிறுவனத்துக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம். தமிழ்நாட்டில் மின் தேவையை பூர்த்தி செய்வதற்கும், மின் செலவை குறைப்பதற்கும் அடுத்த 10 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 25,000 மெகா வாட் மின் உற்பத்தி செய்ய தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திட்டமிட்டு உள்ளது. அதற்கான திட்டங்களை செயல்படுத்துவதற்கு ரூ.1,32,500 கோடி நிதி தேவைப்படும் என்றும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தமிழ்நாட்டில் மின் உற்பத்தி திறனை […]
சென்னை அண்ணாசாலையில் மின் நுகர்வோர் சேவை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு மின் வாரிய அலுவலகத்தில் மின் நுகர்வோருக்கான சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது. மின்துறை தொடர்பான அனைத்து புகார்களையும் மின் நுகர்வோர் சேவை மையத்தில் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மின்துறை தொடர்பான புகார்களை 24 மணி நேரமும் தெரிவிக்கும் வகையில் மின் நுகர்வோர் சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணாசாலையில் மின் நுகர்வோர் சேவை மையத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். புதிய […]