மக்களே மழை நேரத்தில் இதை பண்ணாதீங்க! மின்சார வாரியம் அறிவுறுத்தல்!

மின் சேவைகள் மின் கம்பி அறுந்து தொங்கிக் கொண்டிருந்தாலோ மின் தடை குறித்த புகார்களுக்கு உடனடியாக 9498794987 தொடர்பு கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தல்.

Chennai Rains

சென்னை : வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி கடற்கரையில் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அத்துடன் புயல் கரையை கடக்கும்போது   சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும், புயல் காற்றுக்கும் வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசியத் தேவை தவிர இதர பணிகளுக்காக வெளியில் வருவதைத் கண்டிப்பாக தவிர்த்து பாதுகாப்பாக வீடுகளில் இருக்குமாறு ஏற்கனவே தமிழக அரசு அறிவுறுத்தலை வழங்கி இருந்தது. இதனையடுத்து, தற்போது தமிழக மின்சார வாரியம் இந்த மழை நேரத்தில் செய்யகூடாத விஷயங்களை பற்றி மக்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியிருக்கிறது. அதனைப்பற்றி பார்ப்போம்..

  • வீடுகள் மற்றும் கட்டடங்களில் உள்ள ஈரப்பதமான சுவர்களில் கை வைப்பதை தவிர்க்க வேண்டும்.
  • சாலைகளிலும், தெருக்களிலும் மின்கம்பங்கள் மற்றும் மின் சாதனங்களுக்கருகே தேங்கிக்கிடக்கும் தண்ணீரில் நடப்பேதா, ஓடுவேதா, விளையாடுவேதா மற்றும் வாகனத்தில் செல்வேதா தவிர்க்கப்பட வேண்டும்.
  • தாழ்வாக தொங்கிக் கொண்டிருக்கும் மின்சார ஒயர்கள் அருகில் செல்வைதயும், தொடுவதையும் தவிர்க்க வேண்டும்.
  • மின்சார கம்பத்திலோ அல்லது அதற்காக போடப்பட்டுள்ள ஸ்டே வயரின் (stay wire) மீதோ கொடி கயிறு கட்டி துணி காய வைக்க வேண்டாம்.
  • மின் கம்பத்திலோ அல்லது அவற்றை தாங்கும் கம்பங்களிலோ கால்நடைகளை கட்டி வைக்க வேண்டாம்.
  • ஈரமான கைகளால் மின் சுவிட்சுகள், மின்சார சாதனங்களை இயக்க முயற்சிக்க வேண்டாம்.
  • வீட்டில் மின் சுவிட்சுகைள ‘ஆன்’ செய்யும் போது கவனத்துடன் இயக்கவும்.
  • வீட்டின் உள்புற சுவர் ஈரமாக இருந்தால் மின்சார சுவிட்சுகள் எதையும் இயக்கக் கூடாது.
  • நீரில் நனைந்த பேன், லைட் உட்பட எதையும் மின்சாரம் வந்தவுடன் இயக்க வேண்டாம்.
  • மின்சார மீட்டர் பொருத்தப்பட்டுள்ள பகுதி ஈரமாக இருந்தால் உபேயாகிக்கக்கூடாது.
  • வீட்டில் மின்சாரம் இல்லையென்றால் அருகில் இருந்து தாங்களாகவே ஒயர் மூலம் மின்சாரம் எடுக்க வேண்டாம்.
  • மின் கம்பிகள் அறுந்து கிடக்கும் பகுதிகள், மின்சார கேபிள்கள், மின்சார கம்பங்கள், பில்லர்பாக்ஸ் (pillar box) மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் இருக்கும் பகுதிகளுக்கு அருகில் செல்வது தவிர்க்கப்பட வேண்டும்.

மின் சேவைகள் மின் கம்பி அறுந்து தொங்கிக் கொண்டிருந்தாலோ, மின் கம்பங்கள் உடைந்திருந்தாலோ, சாய்ந்திருந்தாலோ மற்றும் மின் தடை குறித்த புகார்களுக்கு உடனடியாக 24 மணி நேரமும் செயல்படும் மாநில மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தை 9498794987 தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் எனவும் மின்சார வாரியம் கூறியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்