சென்னை:மின் சேவைகள் பற்றியும் அறியவும், விண்ணப்பிக்கவும் புதிய இணையதள முகவரியை TANGEDCO அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியமான TANGEDCO தலைமையின் கீழ்tangedco.orgஎனும் இணையதளம் செயல்பட்டு வருகிறது. இதில் மின்சார வாரியம் தொடர்பான செய்திகள், மத்திய மாநில அரசுகளின் மின் திட்டங்கள், இணைப்பு பெற விண்ணப்பங்கள் என பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்தtangedco.orgஇணையத்தளமானது பல்வேறு சேவைகளை வழங்குவதால் அதில் ஒரு லிங்கை கிளிக் செய்தால் அது இன்னொரு லிங்கை திறக்கும் வகையில் பல்வேறு இணைப்பு இணையதளங்களை உருவாக்கும். பல்வேறு சேவைகள் அதில் இருப்பதால் பயனர்கள் தங்களுக்கான மின் இணைப்பு சேவைகள் பற்றி பயன்படுத்த சற்று சிரமாக இருந்ததது.
அதனை தவிர்த்து, தற்போது, புதிய இணையதளத்தை TANGEDCO அறிவித்துள்ளது. அதன்படி,app1.tangedco.orgஎனும் தளத்தை தற்போது அறிமுகம் செய்துள்ளது. இதில் நுகர்வோருக்கான மின் இணைப்பு சேவைகள் பற்றி மட்டும் குறிப்பிடபட்டு இருக்கும், இணைப்பை பெற, மாற்ற இன்னும் பிற சேவைகள் பெற இந்த தளம் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
