தமிழ்நாடு

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு தவெக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மவுனத்தையும், இதுபோன்ற மரணங்களுக்கு எதிராக போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் விமர்சித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், ”சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்து செய்யப்பட்ட இளைஞர் மரணத்தில் போலீஸாரை கைது செய்ய தவெக வலியுறுத்தியுள்னர். தவறிழைத்த காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்து […]

#DMK 5 Min Read
bussy anand

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கை மாறனின் காரை வழிமறித்து உயிரிழந்த அஜித்தின் உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். முன்னதாக, இந்தச் சம்பவத்தை அடுத்து, திருப்புவனம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நகை திருடியதாக கூறி, திருப்புவனம் காவல்துறையினர் அஜித்குமாரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். […]

#ADMK 7 Min Read
DMK - ADMK

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். 2025 ஜூலை 1ஆம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்படும் என தகவல்கள் வெளியான நிலையில், அதற்கு அமைச்சர் சிவசங்கர் மறுத்துள்ளார். சமூக வலைதளங்களிலும், சில செய்தி ஊடகங்களிலும் தமிழ்நாட்டில் வீட்டு மின் இணைப்புகளுக்கு மின் கட்டண உயர்வு ஜூலை 1, 2025 முதல் அமலாக உள்ளதாக வதந்திகள் பரவின. அதாவது, தமிழகத்தில் நாளை மறுநாள் […]

#Minister Sivasankar 4 Min Read
Minsiter electricity

‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகத்தின் Face Lab இயக்குனர் பேராசிரியர் கரோலின் வில்கின்சன் தலைமையில், கீழடி அகழாய்வில் கிடைத்த மண்டை ஓடுகளைப் பயன்படுத்தி, கணினி உதவியுடன் முகத் தசைகளை மீட்டமைத்து, உடற்கூறியல் மற்றும் மானுடவியல் அளவீடுகளைப் பின்பற்றி இந்த முகங்கள் உருவாக்கப்பட்டன. கொந்தகையில் 800 மீட்டர் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட இந்த மண்டை ஓடுகளை ஆய்வு செய்து, […]

#UK 4 Min Read
mk stalin keeladi

2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!

சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தலைமையிலான கூட்டணியில் தொடர்ந்து பங்கேற்கும் என சென்னையில் நடந்த மதிமுகவின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மதிமுகவின் நிர்வாகிகள் திமுகவில் சேர்க்கப்பட்டு வரும் நிலையில், மதிமுக நிர்வாகக் குழு கூட்டம் சென்னையில் இன்று ஜூன் 29-ந் தேதி நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், மதிமுகவின் தலைவர் வைகோ மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் […]

#DMK 4 Min Read
mdmk dmk

கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர் முகங்கள் 3D முறையில் வடிவமைப்பு.!

மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான நாகரிகங்களில் ஒன்று இருந்ததை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கார்பன் டேட்டா  உறுதிப்படுத்தியுள்ளனர். மதுரையில் இருந்து 12 கி.மீ தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கீழடியில் கிடைத்த மண்டை ஓடுகளை வைத்து, 2,500 ஆண்டுகளுக்கு முன்பு கீழடி பகுதியில் வாழ்ந்த இருவரின் முகங்களை 3D செயல்முறையில் இங்கிலாந்தின் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகம் வடிவமைத்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த […]

#UK 4 Min Read
Keeladi

இனி இவர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை.., கூடுதல் தளர்வுகளை அறிவித்த தமிழ்நாடு அரசு.!

சென்னை : தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் யார் யார் விண்ணப்பிக்கலாம் என்பதற்கான தகுதி பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான கூடுதல் விதிவிலக்குகள் வழங்கி அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அதன்படி, மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தமிழக அரசு மூன்று முக்கிய தளர்வுகளை அளித்துள்ளது. இந்தத் திட்டம், பெண்களின் பொருளாதார மேம்பாடு மற்றும் சமூக அந்தஸ்தை உயர்த்துவதற்காக 2023-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் மூலம், தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. முன்னதாக, நான்கு சக்கர வாகனம் […]

#Magalir urimai thittam 5 Min Read
MagalirUrimaiThittam

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா தொடர்பான போதைப்பொருள் வழக்கு குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்தார்.  இந்த வழக்கு, முன்னாள் அதிமுக ஐடி விங் நிர்வாகி பிரசாத் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தொடங்கியது. பிரசாத் அளித்த தகவலின் அடிப்படையில், நடிகர் ஸ்ரீகாந்தின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு, மூன்று கொக்கைன் பாக்கெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்குப் பின், […]

#Police 6 Min Read
krishna and srikanth seeman

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60) உடல்நலக் குறைவு காரணமாக 2025 ஜூன் 21 அன்று காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுமார் இரண்டு மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவையடுத்து, வால்பாறை தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகத்தின் அறிவிப்பின்படி, “திரு. டி.கே. அமுல் […]

admkmla 4 Min Read
valparai

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. கட்சியின் முழு அதிகாரமும் தன்னிடமே உள்ளதாகவும், 99% கட்சியினர் தனது பக்கம் இருப்பதாகவும் அன்புமணி தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்த பாமக சமூக ஊடகப் பிரிவு கூட்டத்தில் பேசிய அவர் “காலையில் இலந்தை பழம் விற்பவரை கூட்டிவந்து பொறுப்பு கொடுங்கள் என்றால், ராமதாஸ் கையெழுத்து போடுகிறார். இதிலிருந்து […]

#PMK 7 Min Read
ramadoss and anbumani

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் சமீபத்தில் பேசிய ராமதாஸ் ” தாம் உயிருடன் இருக்கும் வரை, பாமகவுக்கு தாம்தான் தலைவர் என்று கூறினார். திமுக தலைவராக கருணாநிதி பதவி வகித்தது போல, தாமும் பாமக தலைவராக இருப்பேன்” என்றும் ராமதாஸ் உறுதியாக தெரிவித்திருந்தார். அன்புமணி குறித்த கேள்விக்கு, ”அவர் தான் சொல்வது போல கேட்டாக வேண்டும். […]

#PMK 5 Min Read

ராமதாஸ் வைத்த குற்றச்சாட்டுகள்..”மாமனாரை மதிக்கணும்”..சௌமியா கொடுத்த பதில்!

சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தது குறித்து ஜூன் 27, 2025 அன்று செய்தியாளர் சந்திப்பில் பேசினார். அவர், சௌமியா தேர்தலில் நிற்பதற்கு தனது எதிர்ப்பை தெரிவித்திருந்ததாகவும், தனது குடும்பத்தில் உள்ள பெண்கள் அரசியலுக்கு வரக் கூடாது என்ற தனது நிலைப்பாட்டை மீறி இது நடந்ததாகவும் கூறினார். இது குறித்து பேசிய அவர் “அன்புமணியும் சௌமியாவும் என்னிடம் கெஞ்சி தர்மபுரியில் போட்டியிட […]

#PMK 5 Min Read
ramadoss and Sowmiya Anbumani

சிறுவன் கடத்தல் வழக்கு : பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு!

திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்எல்ஏவுமான பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவாகியுள்ளார். இந்தச் சம்பவம், ஒரு காதல் திருமணம் தொடர்பாக எழுந்த மோதலில் நடந்ததாகக் கூறப்படுகிறது. ஜூன் 15, 2025 அன்று, பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்ய திருவள்ளூர் போலீசார் அவரது வீட்டிற்கு சென்றபோது, அவரது ஆதரவாளர்கள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 35 ஆதரவாளர்கள் மீது வெள்ளவேடு காவல் நிலையத்தில் […]

Child kidnapping case 4 Min Read
jaganmoorthy

இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு! டெல்டா வெதர்மேன் கொடுத்த அலர்ட்!

சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு பருவமழை நாடு முழுதும் துவங்குவதற்கு சாதக சூழல் காணப்படுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுதும் பருவமழை துவங்கிவிடும். வடக்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய வங்கதேசம், மேற்கு வங்க கடற்கரையோர பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக சாதக சூழல் காணப்படுகிறது. தமிழகத்தில் நேற்று (27/06/2025) […]

#IMD 4 Min Read
rain news

சிதம்பரம் அருகே கொடூரம்…காதல் விவகாரத்தில் மகளையே கொன்ற தந்தை!

கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற நபர் வசித்து வந்துள்ளார். அவருடைய மகள் அபிதா என்ற இளம் பெண்ணுக்கு திருமணத்திற்கான ஏற்பாடுகள் மும்மரமாக போய்க்கொண்டு இருந்தது. இப்படியான சூழலில் திடீரென அர்ஜுனன் தன்னுடைய மகள் அபிதாவை கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். சம்பவ இடத்திலே அபிதா துடி துடித்து உயிரிழந்த நிலையில், மகளை கொன்றுவிட்டு அர்ஜுனன் தலைமறைவானார். பிறகு இது குறித்து […]

Arjunan 4 Min Read
murder

தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளிலும் ‘வாட்டர் பெல்’ திட்டம் கொண்டு வருவோம்! அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

சென்னை : தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தவறாமல் தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் ‘வாட்டர் பெல்’ திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார். இந்தத் திட்டத்தின் கீழ், பள்ளிகளில் குறிப்பிட்ட நேரங்களில் மணி ஒலிக்கப்பட்டு, மாணவர்களுக்கு தண்ணீர் குடிக்க நினைவூட்டப்படும். இது குறித்த அறிவிப்பை அவர் தனது  எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார். இது குறித்து பேசிய அவர் “கேரளாவில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வரும் ‘வாட்டர் பெல்’ திட்டத்தை, தமிழ்நாட்டு […]

#Kerala 5 Min Read
anbil mahesh

“பாமகவில் பிரச்னை செய்ய திமுகவிற்கு என்ன தேவை உள்ளது?” – செல்வப்பெருந்தகை பேச்சு!

விழுப்புரம்: பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இப்படியான சூழலில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பாமக நிறுவனர் ராமதாஸை விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் (ஜூன் 27) இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு இன்னுமே  அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, “பாமகவில் பிரச்னை செய்ய திமுகவிற்கு என்ன தேவை உள்ளது? இது மரியாதை […]

#DMK 5 Min Read
selvaperunthagai ramadoss

“விலங்குகள் தாக்குவது இயல்பு”…அலட்சியமாக பதில் சொன்ன ராஜகண்ணப்பன்.. எழுந்த கண்டன ஆர்ப்பாட்டம்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பாறை அருகே தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு ஒன்று இருக்கிறது. அந்த குடியிருப்பு பகுதியில், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மனோன் முண்டா – மோனிகா தேவி தம்பதியினர் தனது 2 குழந்தைகளுடன் தங்கி இருந்து அந்த தேயிலை தோட்டத்தில் வேலைபார்த்து வந்தனர். கடந்த ஜூன் 20-ஆம் தேதி மோனிகா தேவி மூத்த மகள் ரோஷினி (வயது 7) உடன் வீட்டின் பின்புறம் இருந்த தண்ணீர் தொட்டியில் தண்ணீர் பிடித்துக்கொண்டு இருந்தனர். […]

#DMK 6 Min Read
Raja Kannappan

”ரயில் கட்டணம் படிப்படியாக உயர்த்தப்படும்” – ரயில்வே துறை இணை அமைச்சர்.!

சென்னை : வரும் 1-ம் தேதியன்று ஏ.சி. மற்றும் ஏசி அல்லாத ரயில் டிக்கெட்டுக்கான கட்டணம் 1 கிலோ மீட்டருக்கு முறையே 2 பைசா, 1 பைசா உயர்த்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகின. அதன்படி, ரயில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான அறிவிப்பு ஜூலை 1-ல் வெளியாகும் என ரயில்வே இணையமைச்சர் சோமண்ணா கூறியுள்ளார். சென்னை ICF-ல் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில், அம்ரித் பாரத் பணிகளை  ரயில்வே இணையமைச்சர் சோமண்ணா ஆய்வு செய்தார். அப்போது […]

Fare Hike 3 Min Read
V Somanna - TRAIN

”கூமாப்பட்டி – பூங்கா மேம்பாட்டு பணிகள் தொடங்கப்படும்” – விருதுநகர் ஆட்சியர் உறுதி.!

விருதுநகர் : ஊட்டி, கொடைக்கானல் என பிரபல சுற்றுலாத் தலங்களை எல்லாம் ஓரம்கட்டி விட்டுத் திடீரென கூமாபட்டி கிராமம் வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. கூமாபட்டி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு இடமாகும், இது சமீபத்தில் சமூக வலைதளங்களில், குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஒரு இளைஞரின் ரீல்ஸ் வீடியோ மூலம் பிரபலமடைந்தது. இதனால், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இந்த இடத்தைப் பார்வையிட ஆர்வத்துடன் சென்றனர். ஆனால், கூமாபட்டி எதிர்பார்த்த அளவுக்கு சுற்றுலாத் தலமாக வசதிகள் இல்லாத இடமாக இருந்ததால், பலர் […]

District Collector 6 Min Read
Koomapatti - District Collector