நடிகர் விஜய்- நடிகை கீர்த்தி சுரேஷ்,இயக்குநர் AR முருகதாஸ் இயக்கத்தில், AR ரகுமான் இசையில் சன்பீக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சர்கார் என்று தலைப்பு வைத்துள்ள படக்குழு படத்தை தீபாவளிக்கு வெளியிட தயாராகி வருகின்றனர்.தளபதியின் மாஸ்,கிளாஸ் என்று அதிரடியான இப்படம் வெளியாக சில சர்ச்சைகளையும் சந்தித்து வெளியாக உள்ள நிலையில் விஜய் படம் என்றாலே சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது.
unknown nodeஅந்த வகையில் இந்த படத்திலும் சர்ச்சைக்கும் பஞ்சமில்லை எப்படியோ படம் வெளிவர ரெடியாகியுள்ளது.இந்த நிலையில் தமிழக ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர் கேரள ரசிகர்கள் அதன் முன்னோட்டமாக தங்களின் தளபதிக்கு இந்தியாவிலே நடிகருக்காக வைக்கப்பட்ட கட் அவுட்களில் இது தான் மிகப்பெரியதாம் அந்த சாதனையை கேரள விஜய் ரசிகர்கள் பெற்றுள்ளனர்.
unknown nodeதமிழகத்தை காட்டிலும் கேரளாவில் நடிகர் விஜய்க்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். இந்நிலையில் எப்போதும் இல்லாத அளவுக்கு விஜயின் உருவம் கொண்ட மிக பிரமாண்டமான 175 அடி அளவில் கட்அவுட் வைத்துள்ளனர் கேரள ரசிகர்கள். இது தமிழ்நாட்டு ரசிகர்களையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.
unknown nodeபடத்தின் ரிலீசுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இன்று மாலை தான் நடிகர் விஜயின் கட்அவுட் முழுவதும் முடிந்து தற்போது தான் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த கட் அவுட்டை பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்துள்ளனர்.இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பகிரப்பட்டும் வருகிறது .
unknown nodeDINASUVADU