ஈராக்கைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் மாடல் அழகி பாக்தாத்தில் பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
22 வயதான தாரா ஃபரேஸ் (Tara Fares) தமது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் பதிவேற்றி உலகப்புகழ்பெற்றவர். இவரது சிகை அலங்காரக் குறிப்புக்கள், மற்றும் சூழலுக்கு ஏற்ற ஆடை அணிவது குறித்து ஃபேஷன் டிப்ஸ்கள் பிரபலமானதால், 27 லட்சம் பேர் இவரை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்ந்தனர்.
unknown nodeஇந்நிலையில், கேம்ப் சாரா மாவட்டத்தில் தமது போர்ஸெ (Porsche) சொகுசு காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். மூன்று தோட்டாக்கள் பாய்ந்த மாடல் அழகி தாரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது புகழ் மீது பொறாமை கொண்டு பாதிக்கப்பட்ட யாரேனும் அவரை சுட்டுக் கொன்றிருக்கலாம் என அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், அந்நாட்டு உள்துறை அமைச்சகம் பட்டப்பகலில் நடந்த படுகொலை குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
DINASUVADU