நடிகர் அஜித்தின் “குட் பேட் அக்லி” திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ்!
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வந்துள்ளது.

சென்னை: இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் “குட் பேட் அக்லி” திரைப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர்கள் இன்று அறிவித்துள்ளனர். அதன்படி, குட் பேட் அக்லி படக்குழு தமிழ் புத்தாண்டை குறிவைத்துள்ளதாக தெரிகிறது.
அதாவது, திங்கட்கிழமை (ஏப்ரல் 14) தமிழ் புத்தாண்டு என்பதால், படம் ஏப்ரல் 10-ம் தேதி (வியாழன்) அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. முன்னதாக, அஜித்தின் ‘விடாமுயற்சி’ படம் பொங்கலுக்கு வெளியாக இருந்ததால் இந்த படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.
தற்போது படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன. இந்த நிலையில், அஜித் ரசிகர்களுக்கு பொங்கல் ஏப்ரலில்தான் போல் தெரிகிறது. குட் பேட் அக்லி திரைப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரபு, பிரசன்னா, ராகுல் தேவ், யோகி பாபு மற்றும் சுனில் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் தயாரிப்பு பணிகள் முடிவடைந்து, கடந்த ஆண்டு டிசம்பரில் அஜீத் தனது பணியை முடித்த உடன் டப்பிங் பணி தொடங்கியது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய் ரவிசங்கர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி, ஏப்ரல் 10 ஆம் தேதி குட் பேட் அக்லி தவிர, தனுஷ் இயக்கிய இட்லி கடையும் அன்று தான் திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
#GoodBadUgly arrives on April 10th❤️???????? @MythriOfficial @SureshChandraa pic.twitter.com/K6N1x7uANT
— Adhik Ravichandran (@Adhikravi) January 6, 2025
லேட்டஸ்ட் செய்திகள்
தவெக சிறப்பு ஆலோசகர் ஆகிறாரா பிரசாந்த் கிஷோர்? விஜய்யுடன் 2.30 மணி நேரம் சந்திப்பு!
February 10, 2025
கலகலன்னு கலக்கும் ப்ரதீப் ரங்கநாதனின் ‘ட்ராகன்’ ட்ரெய்லர்.!
February 10, 2025
NZ vs SA : சதமடித்து எதிரணியை மிரளவிட்ட கேன் மாம்ஸ்… நியூசிலாந்து அணி திரில் வெற்றி.!
February 10, 2025
2வது ஒருநாள் போட்டியில் லைட் எரியாததால் வெடித்தது பிரச்சனை! OCA-வுக்கு நோட்டீஸ் அனுப்பிய ஒடிசா அரசு.!
February 10, 2025
கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள்!
February 10, 2025