ஜி.வி. பிரகாஷ் இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ‘வாட்ச்மேன்’ படத்தில் மிகவும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.
இந்த படம் வரும் ஏப்ரல் 12ம் தேதி வெளியாகும் என்று படக்குழு தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
நடிகர் ஜீ.வி பிரகாஷ் கோலிவுட் சினிமாவில் மிகசிறந்த நடிகராகவும் ,இசைஅமைப்பாளராகவும் வலம் வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் சர்வம் தாளமயம். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்தவரவேற்பை பெற்றது.
இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில், ஐங்கரன், 4ஜி, 100% காதல், அடங்காதே, குப்பத்து ராஜா, ஜெயில் என வரிசையாக பல படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில் தற்போது ஜி.வி. பிரகாஷ் இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ‘வாட்ச்மேன்’ படத்தில் மிகவும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இப்படத்தில் யோகிபாபு மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்து கொண்டிருக்கிறார்கள்.இந்த படம் தற்போது த்ரில்லர்படமாக உருவாகி வருகிறது.இந்த படம் வரும் ஏப்ரல் 12ம் தேதி வெளியாகும் என்று படக்குழு தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.