ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் தனது மகனின் நீச்சல் பயிற்சிக்காக மும்பையில் இருந்து துபாய் சென்று குடியேறியுள்ளார் நடிகர் மாதவன்.
கோலிவுட்டில் அறிமுகமாகி, பாலிவுட் வரை சென்று அங்கும் தன்னை நல்ல நடிகனாக நிரூபித்து வருபவர் நடிகர் மாதவன். அவர் நல்ல நடிகன் என்பதையும் தாண்டி தான் ஒரு நல்ல தந்தை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து காண்பித்துள்ளார்.
மாதவன் நினைத்திருந்தால், தனது மகனை சினிமாவில் ஓர் நட்சத்திரமாக்கி இருக்கலாம். ஆனால், அதனை தவிர்த்து தனது மகனுக்கு என்ன பிடித்திருக்கிறதோ அதில் செயல்பட தன்னால் முடிந்த அத்தனையும் செய்து வருகிறார் ஓர் நல்ல தந்தையாக.
அவரது மகன் வேதாந்த் நீச்சல் போட்டியில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ளார். அடுத்து அவரது கனவு ஒலிம்பிக்கில் பங்கேற்று இந்தியாவுக்காக பதக்கம் வெல்வதே.
இதற்காக மும்பையில் இருந்த மாதவன், தற்போது மும்பையில் நீச்சல் குளங்கள் மூடியிருக்கின்றன. மேலும் திறக்கப்பட்டுள்ள சில நீச்சல்குளங்கள் ஒலிம்பிக் பயிற்சிக்கு ஏற்ற வகையில் போதுமானதாக இல்லை.
ஆதலால், தனது மகனின் ஒலிம்பிக் கனவை நிறைவேற்ற தனது குடும்பத்துடன் துபாய் சென்றுள்ளார் நடிகர் மாதவன். இது பற்றி அவர் கூறுகையில், நானோ எனது மனைவி,யோ எனது மகன் நடிகனாக வேண்டும் என விரும்பவில்லை. குழந்தைகளை அவர்கள் அருகில் இருப்பதை நன்றாக கவனித்து கொள்ளவும், பாட்டி தாத்தாவுக்கு உதவி செய்யவும் ஊக்கப்படுத்துங்கள். வீட்டில் உள்ள தாவரங்கள், விலங்குகளை பாதுகாக்க ஊக்கப்படுத்துங்கள். ‘ என கூறியுள்ளார்.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…