தனது சகோதரி குறித்து மன நெகிழ்வுடன் கூறிய நடிகர் சிவகார்த்திக்கேயன்.....!!!

நடிகர் சிவகார்த்திக்கேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருந்தார். தற்போது இவர் ஒரு பிரபலமான நடிகராகவே மக்களால் பார்க்கப்படுகிறார். இவர்

நடிகர் சிவகார்த்திக்கேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருந்தார். தற்போது இவர் ஒரு பிரபலமான நடிகராகவே மக்களால் பார்க்கப்படுகிறார். இவர் நடித்துள்ள பல படங்கள் ஹிட் ஆகியுள்ளது. தற்போது இவர் நடித்துள்ள கனா படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில், இவர் கனா படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் சிவகார்த்திக்கேயன் தனது அக்கா கெளரியுடன் கலந்து கொண்டுள்ளார். அப்போது பேசிய அவர் தனது அக்காவை குறித்து கூறியுள்ளார். இது பார்ப்போரையும் கண்கலங்க வைத்துள்ளது.

unknown node

இந்நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது, தனது வாழ்வில் நடந்த சில சம்பவங்களை கூறியுள்ளார். மேலும் தனது அக்காவின் திறமையான சில செயல்களையும், தனது அப்பாவை சிறுவயதிலேயே இழந்தது குறித்தும் கூறியுள்ளார்.மேலும் அவர் கூறுகையில், எனது அக்கா என்னை ஒரு தகப்பனை போல இதுவரை வழிநடத்தி வருகிறார். எனது அக்கா இல்லையென்றால் நான் இந்த நிலைக்கு வந்திருக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். என் அக்கா எனக்கு அப்பா மாதிரி. எனது அப்பாவுக்கு கிடைக்க வேண்டிய மரியாதையையும், கவுரவத்தையும்  என் அக்காவுக்கு தேடி கொடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார்.