கலாம் வழியில் இறங்கிய இளைய தளபதி விஜய்... மரக்கன்றுகளை நட்டு வரும் சமுதாயத்திற்க்கு வாழிகாட்டும் விஜய்...

தற்போது தமிழக அளவில் அதிரடியாக இருந்து வருபவர் இளைய தளபதி விஜய். இவர், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் தற்போது நடித்து

தற்போது தமிழக அளவில் அதிரடியாக இருந்து வருபவர் இளைய தளபதி விஜய். இவர், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் தற்போது நடித்து முடித்திருக்கிறார் . இந்த படத்தில் இவர், முதல்முறையாக கல்லூரி பேராசியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதில், மாணவர்களும், தனது ரசிகர்களும் பின்பற்றும் வகையில் அங்கு மரம் நட்டு வைத்துள்ளார். கடைசி நாள் படப்பிடிப்பின் போது ரசிகர்களுடன் எடுக்கப்பட்டிருந்த செல்ஃபி மட்டுமே பிரபலமான நிலையில் தற்போது நெய்வேலியில் நடிகர் விஜய், மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் மரம் நட்டு வைத்திருப்பதையும் ரசிகர்கள் வெளி உலகுக்கு தெரிவித்துள்ளனர்.

unknown node

இதுகுறித்து விஜய் ரசிகர்களால்  வெளியிட்டிருக்கும் இரண்டு புகைப்படங்களில் ஒன்றில் விஜய் பெயரும், மற்றொன்றில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்தப் பதிவை விஜய் ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர். முன்னதாக நடிகர் விஜய் ரசிகர்கள் பலரும் மரம் நடுவதில் அதிக ஆர்வம் கொண்டு, அவரவர் வாழும் பகுதிகளில் மரம் நட்டு அதை சமூகவலைதளங்களில் புகைப்படமாக பதிவிட்டு வரும் நிலையில், நடிகர் விஜய்யின் இச்செயலுக்குப் பின் ரசிகர்கள் மரம் நடுவதை அதிகப்படுத்துவார்கள் என்றும், இது இளைஞர்களின் கனவுநாயகனான அப்துல் கலாமின் ஆசையான மரம் நடும் எண்ணத்தை வரும் சமுதாயத்தினரிடையே ஏற்படுத்தும் என்று விஜய் ரசிகர்களால் நம்பப்படுகிறது.