நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவுக்கு, சக நடிகரான விஜய் நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார்.
நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியன் நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அஜித்தின் தந்தை சுப்ரமணியன் உயிரிழந்துவிட்டார். அஜித்குமாரின் தந்தை மறைவுக்கு நடிகர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் ஆறுதல் கூறிவருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் அஜித்குமாரின் சக நடிகரான விஜய், சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித் வீட்டிற்கு நேரில் சென்று தனது ஆறுதலை தெரிவித்துள்ளார். முன்னதாக அஜித் தந்தை உடல் பெசன்ட்நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.