சாய் பாபா கோயிலில் தரிசனம் செய்த நடிகர் விஜய் – புகைப்படம் வைரல்!

Sai BabaTemple: சாய் பாபா கோயிலுக்குச் சென்ற நடிகர் விஜய்யின் புகைப்படம் இணையத்தில் வைரல்.
துபாயில் உள்ள சாய் பாபா கோயிலில், நடிகர் விஜய் சாமி தரிசனம் செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கிவரும் ‘GOAT’ படத்திற்கான படப்பிடிப்பில் அவர் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், திடீரென அங்குள்ள சாய் பாபா கோயிலுக்குச் சென்ற அவர் மனமுருகி வேண்டிக்கொண்டார். இதையடுத்து கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு சிறப்புப் பிரசாதம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படட்தின் படப்பிடிப்பு ஒரு சில வாரங்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் முதல் சிங்கிள் அடுத்ததாக வெளியிடப்படும் என்றும், தயாரிப்பாளர்களிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025