அமலாபாலுடன் இந்த படத்தில் ஐக்கியமான பிஜிலிரமேஷ் ..!!யாரு அவர்தானா...அது..??

நடிகை அமலாபால் நடித்து வரும் படத்தில் பிஜிலி ரமேஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகை அமலாபால் நடித்து வரும் படத்தில் பிஜிலி ரமேஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

unknown node

தற்போது சமீப காலமாக யூடியூப் போன்ற சமூக வலைதளங்களை  பலரும் பயன்படுத்தி அதன் மூலம் பிரபலமாகி வருகின்றனர். அப்படி பிரபலமானவர்களில் முக்கியமானவர் ரஜினிகாந்தின் ரசிகரான பிஜிலி ரமேஷ்.

unknown node

இவரது பேச்சை பலர் டப்ஸ்மேஷ் செய்தும் வெளியிட்டு வந்தனர். இதையடுத்து யூடியூப் வீடியோக்களில் நடிகராக வலம் வந்த பிஜிலி ரமேஷ் கோலமாவு கோகிலா படக்குழுவினர் வெளியிட்டிருந்த புரமோஷன் வீடியோ ஒன்றில் நடித்திருந்தார். கோலமாவு கோகிலா படத்தில் அதில் கபிஸ்கபா என்ற ஜிப்ரிஷ் பாடலில் தோன்றியிருந்தார் பிஜிலி ரமேஷ் .

unknown node

கோலமாவு கோகிலா படத்தின் புரமோஷன் வீடியோவில் மட்டும் நடித்திருந்த பிஜிலி ரமேஷ் இப்போது மேயாத மான் பட இயக்குநரின் அடுத்த படமான ஆடை படத்தில் நடிக்க உள்ளார்.

இந்தப் படம் நடிகை அமலா பாலுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.சமீபத்தில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தையும் பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

DINASUVADU