நகைச்சுவை படத்தில் களமிறங்கிய நடிகை ஜோதிகா!இவர் இயக்குகின்ற படத்தில் தானா

This news gives information about Actress Jyothika in the comedy film

நடிகை ஜோதிகா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார் .இவர் நடிகர் சூர்யாவை திருமணம் செய்த பிறகு திரைப்படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார்.

இந்நிலையில் சமீப காலமாக நடிகை ஜோதிகா கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார்.”36 வயதினிலே”  , “நாச்சியார்”, “மகளிர் மட்டும்” , “காற்றின் மொழி” ஆகிய படங்களை நடித்து உள்ளார்.

தற்போது ஜோதிகா நடித்து உள்ள படத்தை அவரது கணவர் சூர்யா தயாரித்து உள்ளார். இப்படத்தை  கல்யாண் இயக்கியுள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து நிலையில் படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.

இப்படத்தில்  ரேவதி, யோகிபாபு, ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், ஜெகன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இதற்கு முன் கல்யாண் இயக்கிய “குலேபகாவலி” நகைச்சுவையாக உருவாக்கி உள்ளார். இப்படமும்  நகைச்சுவையாக உருவாக்கப் பட்டுள்ளது.