‘தளபதி 69’ படத்தில் இணைந்தார் நடிகை பூஜா ஹெக்டே!

நடிகர் விஜய் நடிக்கும் ‘தளபதி 69’ திரைப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே இணைந்துள்ளதாக படக்குழு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Thalapathy69CastReveal

சென்னை : இயக்குநர் H.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 69’ படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அறிவிப்புகளை நேற்றைய தினம் முதல் வெளியிடத் தொடங்கினர். படத்தின் அடுத்த அப்டேட் இன்று 12 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

மேலும், Halamithi யார் என்பதை கண்டு பிடியுங்கள் என ரசிகர்களுக்கு தயாரிப்பு நிறுவனம் Code word அளித்தது. அதன்படி, இந்த திரைப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதற்கு முன்னாதாக, இவர்கள் இருவரும் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் முதலில் இணைந்தவர் பாலிவுட் நடிகர் பாபி தியோல். படத்தில், Lord of charisma என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது அவருக்கு  இரண்டாவது தமிழ் படமாகும். முதலில் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’ படத்தில் நடித்துள்ளர், அந்த படம் நவம்பரில் வெளியாக உள்ளது.

நடிகர் விஜய்யின் இறுதிப் படமான இப்படத்தை கர்நாடகாவை சேர்ந்த கேவிஎன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வெங்கட் கே நாராயணா தயாரித்துள்ளார். மேலும், ஜெகதீஷ் பழனிசாமி மற்றும் லோஹித் என்கே இணை தயாரிப்பாளர்களாக உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

RIP Ratan Tata
Chief pilot Ikrom Rifatli Fami Zainal - co-pilot Maitri Shithole
Rishabh Pant
Train Accident
Optimus Gen-2
MSDhoni
Kavarepet Train Accident - Madurai MP Su Venkatesan