நடிகை சோனியா மிரட்டும் தனிமை படத்தின் டீசர் விரைவில் வெளியாகிறது !!!!

Actress Sonia's intimidation of the film's teaser is soon coming out !!!!

நடிகை சோனியா அகர்வால் “தனிமை” படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இந்த படத்தின் டீசர் நாளை வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகை சோனியா அகர்வால் கோலிவுட் சினிமாவில் உள்ள புகழ் பெற்ற நடிகை. இவர் செல்வராகவன் இயக்கத்தில் வெளி வந்த “காதல் கொண்டேன் ” என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார். மேலும் இவரின் படங்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்து வருகிறது.

அதற்கு பிறகு இவர் நடித்த கோவில், மதுர, 7 ஜி ரெயின்போ காலணி, திருட்டுப்பயலே ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றியை தந்தன.

இந்நிலையில் தற்போது நடிகை சோனியா அகர்வால் “தனிமை” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு  அரவிந்த் எடிட்டிங் பணியை செய்கிறார். foot step productions சார்பில் இந்த படத்தை கே.சுந்தரவள்ளி தயாரிக்கிறார். இந்நிலையில்,இந்த படத்தின் டீசர் நாளை வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.