நடிகர் தனுஷ் நடித்து வெற்றிப்பெற்ற படத்தில் நடிகை அமலாபால் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கசிந்த தகவலால் ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.
நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணியில் வடசென்னை படத்தை தொடர்ந்து வெளியான படம் அசுரன்.இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர், கென் கருணாஸ், பாலாஜி சக்திவேல் உள்ளிட்டவர்கள் முக்கிய கேரக்டரில் நடித்து இருந்தனர்.
இப்படத்தில் நடிகர் தனுஷின் சிவசாமி என்ற கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியிலும் திரையுலகினர் இடையே அவருக்கு பெரும் பாராட்டைப் பெற்று தந்தது. படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைந்து இருந்தார். படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வெளியான நிலையில் படம் 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடி சுமார் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து விட்டதாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கொடுத்தது.
unknown nodeதமிழில் அசுர வெற்றியைத்தொடர்ந்து இத்திரைப்படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. படத்தை கலைப்புலி எஸ்.தாணு மற்றும் சுரேஷ் பாபு இணைந்து தயாரிப்பதாகவும் நடிகர் தனுஷ் கதாபாத்திரத்தில் நடிகர் வெங்கடேஷ் நடிப்பதாகவும் நடிகை மஞ்சு வாரியர் கேரக்டரில் நடிகை பிரியாமணி நடிப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகியது. தமிழில் அசுரன் என்ற டைட்டிலில் வெளியான இப்படம் தெலுங்கில் நரப்பா என்ற டைட்டில் வைக்கப்பட்டு வெளியாக உள்ளது.
unknown nodeஇந்நிலையில் அன்மையில் தான் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் வெங்கடேஷ் கேரக்டரின் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டது. இந்நிலையில் படத்தின் மற்றொரு கதா பாத்திரத்தில் நடிகை அமலாபால் இணைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அசுரன் படத்தில் நடித்த அம்மு அபிராமி கதாபாத்திரத்தில் தான் நடிகை அமலாபால் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவல் குறித்து படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த தகவல் நடிகை அமலாபாலில் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.