அஜித் பாஜகவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை !!! பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா

கடந்த இரு நாள்களுக்கு முன்பு திருப்பூரைச் சேர்ந்த அஜித் ரசிகர்கள் பாஜக கட்சியில் சேர்ந்தனர். இதனை அடுத்து பாஜகவில் ஒரு விழா ஒன்று நடத்தப்பட்டது. அந்த விழாவில்

கடந்த இரு நாள்களுக்கு முன்பு திருப்பூரைச் சேர்ந்த அஜித் ரசிகர்கள் பாஜக கட்சியில் சேர்ந்தனர். இதனை அடுத்து பாஜகவில் ஒரு விழா ஒன்று நடத்தப்பட்டது. அந்த விழாவில் கலந்து கொண்டு  பாஜக மாநில தலைவர் தமிழிசை நடிகர் அஜித்தை பாராட்டி பேசினார். மேலும் இது குறித்து அஜித் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார்

அப்போது அந்த அறிக்கையில்  நான் அரசியலுக்கு எப்போதும் வர வாய்ப்பில்லை. எனது ரசிகர்கள்  புகைப்படத்தையும் , பெயரையும் எப்போதும்  தவறாக பயன்படுத்தக் கூடாது என்று அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார். இந்த அறிக்கை குறித்து பலரும் பாஜகவை விமர்சித்து பேசினார்.

இது குறித்து தற்போது பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா கருத்து ஒன்றை  தெரிவித்துள்ளார். அதில் நடிகர் அஜித் அரசியலுக்கு வரவில்லை என்று மட்டும் தான் கூறியுள்ளார். அஜித்  பாஜக கட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என எச் ராஜா கூறியுள்ளார்.