அரங்கத்தையே அலற வைத்த அனிருத்! தலைவர் சத்தம் வேற ரகம்..தெறிக்கும் வீடியோ!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படம் நாளை (ஆகஸ்ட் 10) அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ரஜினிகாந்தின் கடைசி படமான அண்ணாத்த திரைப்பட ஏமாற்றத்தைத் தொடர்ந்து, ஜெயிலரில் சூப்பர் ஸ்டாரின் நடிப்பைக் காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். அந்த வகையில், இதுவரை இல்லாத அளவுக்கு முன்பதிவு மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ப்ரோமஷன் பணிகள் தொடங்கியுள்ளது. சமீபத்தில், இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டது. இப்படத்தில் இருந்து வெளியான காவாலா மற்றும் ஹும் ஹும் பாடல்கள் வெளியாகி இணையத்தை கலக்கியது.
அதிலும் குறிப்பாக, இந்த ஹும் ஹும் பாடல்கள் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்து இணையத்தை ஒரு பக்கம் அலற விட, ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் இசைமைப்பாளர் அனிருத் அரங்கத்தையே அலற வைத்துள்ளார். அட ஆமாங்க… ‘Hukum’ பாடலை நேரலையில் பாடி செய்து அசத்தியுள்ளார். அந்த வெறித்தனமான வீடியோவை படத்தின் தயாரிப்பு நிறுவனம் தற்போது வெளியிட்டு இருக்கிறது. இதோ …
ஜெயிலர்:
ஜெய்லரில் ரஜினிகாந்துடன், ஜெயிலர் படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவராஜ்குமார், சுனில், மற்றும் யோகி பாபு என ஒரு அற்புதமான நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

ரஜினிகாந்த் இமயமலை பயணம்:
இந்நிலையில், நாளை மறுநாள் ஜெயிலர் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் இன்று இமயமலை செல்கிறார் நடிகர் ரஜினிகாந்த்இன்று செய்தியாளர்களிடம் ரஜினிகாந்த் பேசுகையில், 4 வருடங்களாக கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக இமயமலை செல்லவில்லை. இந்த வருடம் தற்போது இமயமலை செல்ல உள்ளேன் என தெரிவித்தார்.