மனைவியுடன் தேனிலவுக்கு சென்று வேறொரு அறையில் இருந்த ஏ.ஆர்.ரஹ்மான்! உண்மையை உடைத்த பிரபலம்!
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் திருமணம் முடிந்தபிறகு தேனிலவுக்கு சென்றபோது அங்கு நடந்த சுவாரசிய சம்பவம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து செய்தி தான் பெரும் அதிர்ச்சி கலந்த பரபரப்பை ஏற்படுத்தி தற்போதைய ஹாட் ட்ரென்டிங் டாப்பிக்காக இருந்து வருகிறது. அவருடைய பெயர் ட்ரெண்டிங்கில் இருப்பதன் காரணமாக முன்னதாக அவருடைய வாழ்வில் நடந்த சம்பவங்கள் குறித்து அவர்கள் பேசிய வீடியோக்களையும், அவர்களுடைய மறுபக்கம் குறித்து அவருக்கு நெருக்கமானவர்கள் பேசிய பழைய விஷயங்களும் வைரலாகி வருகிறது.
அப்படி தான் தற்போது இசையமைப்பாளர் ரஹ்மான் தனது தேனிலவுக்கு மனைவியுடன் சென்றபோது நடந்த நகைச்சுவை சம்பவம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ரஹ்மான் திருமணம் முடிந்த பிறகு தன்னுடைய மனைவி சாய்ரா பாணுவைத் தேனிலவுக்காக மலைப்பகுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்று இருக்கிறார். அங்கு அழைத்துச் சென்று மனைவியுடன் பேசி நேரத்தைச் செலவிடுவார் என்று பார்த்தால் அவர் வேறொரு அறையிலிருந்திருக்கிறார்.
வேறொரு அறையில் கையில் வீணை வைத்துக்கொண்டு அதனை வாசித்துப் பார்த்திருக்கிறார். மற்றொரு அறையில், சாய்ரா அசந்து தூங்கியிருக்கிறார். இந்த தகவலை, சாய்ரா பானுவின் சகோதரியைத் திருமணம் செய்துகொண்ட நடிகர் ரஹ்மான் சித்தார்த் கண்ணனுடன் முன்னதாக ஒரு நேர்காணலில் கலந்துகொண்டபோது தெரிவித்தார்.
இது குறித்துப் பேசிய அவர் ” ரஹ்மான் அண்ணியைத் தேனிலவுக்காக மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்ற பிறகு ஒரு 1 மணிக்கு நான் அண்ணிக்குக் கால் செய்தேன். அவர் ஏற்கனவே, தூங்கிக்கொண்டு இருந்தார். அவரிடம் நான் ரஹ்மான் எங்கே? என்று கேட்டேன். அதற்கு அவர் தெரியவில்லை என்று பதில் அளித்தார். அதன்பின் அவர் பக்கத்து அறையில் வீணை வாசித்துக்கொண்டு இருந்தது தெரிய வந்தது.
வீணை வைத்து எதோ இசையமைத்துக்கொண்டு இருந்தார். தேனிலவுக்குச் சென்ற இடத்தில் கூட அவர் இசையை அவ்வளவு ரசித்து அதற்கான வேலைகளில் ஈடுபடும் வித்தியாசமான மனிதர்” எனவும் ரஹ்மான் தெரிவித்தார். இவர் கூறிய தகவலைப் பார்த்த ரசிகர்கள் பலரும் “இசைப்புயலுக்கு இசைமீது அவ்வளவு காதல்” எனத் தெரிவித்து வருகிறார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
புனேவில் இரும்பு பாலம் இடிந்து விழுந்து விபத்து – 6 பேர் உயிரிழப்பு.., 20 பேர் மாயம்.!
June 15, 2025
“அமெரிக்காவை தாக்கினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்” – ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை.!
June 15, 2025