போதைப்பொருள் வழக்கில் அர்ஜுன் ராம்பாலின் சகோதரி விசாரணைக்கு அழைப்பு ..!

The Narcotics Control Bureau (NCP) has called for an inquiry into the case of Arjun Rampal's sister Komal Rampal.

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை பிறகு இந்தி திரையுலகில் சினிமா நடிகர், நடிகைகள் போதை பொருள் பயன்படுத்துகின்றனர் என பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால், போதை பொருள் பிரிவு போலீசார் விசாரணையில் ஈடுபட்டு பல பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

சமீபத்தில், இந்தி நடிகர் அர்ஜுன் ராம்பாலின் காதலி கேப்ரில்லாவின் தம்பி அஜிசிலோஸையும் போலீசார் கைது செய்து அர்ஜுன் ராம்பாலுக்கு சொந்தமான வீடுகளில் சோதனை செய்ததில் சில போதை மாத்திரைகளை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. பின்னர், அர்ஜுன் ராம்பாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், இந்த போதைப்பொருள் வழக்கில், அர்ஜுன் ராம்பாலின் சகோதரி கோமல் ராம்பலை விசாரிக்க போதை மருந்து கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி)  அழைப்பு விடுத்துள்ளது. இன்று மும்பையில் உள்ள என்சிபி அலுவலகத்தில் கோமல் ஆஜராகுமாறு கூறப்பட்டுள்ளது.