அருண் விஜய் திரை பயணத்தில் மைல் கல் 'தடம்'! மிரட்டும் 25 நாள் வசூல் நிலவரம்!

this news gives information about Arun Saiji mile stone track Threatens 25 days-arun vijay thirai payam

அருண் விஜய் திரைப்பயணத்தில் அதிக வசூல் ஈட்டிய திரைப்படமாக உருவெடுத்து உள்ளது. இப்படம் 25 நாளில் தமிழ்நாட்டில் மட்டும் 20.7கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்து அருண் விஜய்க்கு பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது.

தமிழ் சினிமாவில் வெற்றிக்காக பல வருடங்கள் கடுமையாக உழைத்து தற்போது அதன் பலனை கொஞ்சம் அனுபவித்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அருண்விஜய்.

இவரது நடிப்பில் தடையறதாக்க ,குற்றம்23, ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. மேலும் என்னை அறிந்தால் படத்தில் தல அஜித்திற்கு வில்லனாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார்.

இந்நிலையில் இவர் ‘தடையறதாக்க’ பட இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் தடம் எனும் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து இருந்தார். இந்த படம் திரில்லர் வகையை சார்ந்து எடுக்கப்பட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இப்படம் அருண் விஜய் திரைப்பயணத்தில் அதிக வசூல் ஈட்டிய திரைப்படமாக உருவெடுத்து உள்ளது. இப்படம் 25 நாளில் தமிழ்நாட்டில் மட்டும் 20.7கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்து அருண் விஜய்க்கு பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது.