இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “என்னை அறிந்தால்”. இந்த படத்தில் அஜித்திற்கு வில்லனாக விக்டர் எனும் கதாபாத்திரத்தில் அருண் விஜய் மிரட்டலாக நடித்திருப்பார். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று அருண் விஜயின் மார்க்கெட்டை உயர்த்தியது என்றே கூறவேண்டும்.
unknown nodeஏனென்றால், இதற்கு முன்பு அருண் விஜய் நடிப்பில் வெளியான படங்கள் கூட அவருக்கு பெரிய வரவேற்பை கொடுக்கவில்லை. ஆனால் என்னை அறிந்தால் படத்தில் நடித்த பிறகு அருண் விஜய்க்கு மக்களுக்கு மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது.
unknown nodeஇந்த நிலையில், அருண் விஜய் நடிப்பில் யானை திரைப்படம் வரும் ஜூன் 17-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனையடுத்து படத்தின் ட்ரைலரை நேற்று கோவையில் உள்ள திரையரங்கு ஒன்றில் ரசிகர்களுடன் அருண் விஜய் மற்றும் ஹரி கண்டுகளித்தனர்.
unknown nodeஅதன்பின் பேசிய அருண் விஜய் ” தமிழ் சினிமாவில் நான் எதிர்பார்க்கும் இடத்தை மக்கள் வழங்குவார்கள் என நம்பிக்கை உள்ளது.என்னை அறிந்தால் படத்தில் வரும் விக்டர் கதாபாத்திரத்தை தனியாக படமாக எடுக்க உள்ளோம்” என கூறியுள்ளார்.