biggboss 3: அப்பிடித்தாண்டா பேசுவேன்! பிக்பாஸ் வீட்டிற்குள் வெடித்த மோதல்!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன்

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்துகொண்ட நிலையில், தற்போது இந்த நிகழ்ச்சியில், 12 பிரபலங்கள் மட்டுமே உள்ளனர்.

இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நாளுக்குநாள் சுவாரஸ்யமான சண்டைகள், மோதல்கள், சந்தோசமான தருணங்கள் என பல விடயங்கள் இடம் பெறுகிறது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ள பிரபலங்கள் சினிமா கதாபாத்திரங்கள் போல நடிக்க வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது.

இதனையடுத்து, சரவணனுக்கு விஜயகாந்த் கதாபாத்திரமும், சேரனுக்கு ரஜினிகாந்த் காதாபாத்திரமும் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், சரவணன் ஒழுங்காக நடிக்கவில்லை என சேரன் கூறிய நிலையில், சரவணன், சேரனை மரியாதை குறைவாக பேசியுள்ளார்.

unknown node