ஏ.ஆர்.ரகுமானை பிடிக்காதவர்கள் யாரும் இல்லை.அவருக்கு எவ்வளவு பெரிய பாராட்டு விழா நடந்தாலும் அமைதியாக புன்சிரிப்புடன் ‘எல்லா புகழும் இறைவனுக்கே ‘என்று கூறிவிட்டு தன்னடக்கத்துடன் இருப்பார்.ஏ.ஆர்.ரகுமான் 1992 ஆம் ஆண்டு ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக இந்த உலகுக்கு அறிமுகமானவர்.
கருத்தம்மா, கிழக்கு சீமையிலே, பம்பாய், இந்தியன் என அவர் இசையமைத்த பல படங்கள் இவருக்கு நன்கு பெருமை சேர்த்தனர்.கிராமத்து ஸ்டைலில் கிழக்குச்சீமையிலே, கருத்தம்மா இந்த இரண்டு படங்களின் பாடல்களை கேட்போரை கண்கலங்க வைக்கும்.
ஏ.ஆர்.ரகுமானை இசை புயல் என்று அனைவராலும் அழைக்கப்படுவார்.அவருக்கு இன்று பிறந்த நாள் ஆகும் இவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் இவர் சாதனையின் உச்சகட்டத்தை தொட்டவர்.பல விருதுகளை பெற்றவர் என்பது குறிப்பிடதக்கது.