போதை வழக்கு : ஜெய்க்கு பிடிவாரண்ட் பதட்டத்தில் அஞ்சலி…!
கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகர் ஜெய் மதுவிருந்து ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு போதையில் காரை ஓட்டியபடி வீடு திரும்பினார். அப்போது நிதானம் இழந்து அடையாறு பாலத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். இந்த விபத்து குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் ஜெய் மீது பல்வேறு பிரிவுகளின் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். இது ஜெய்க்கு இரண்டாவது போதை சம்பவம் என்பதால் அவரது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யவும் சிபாரிசு செய்துள்ளனர்.இந்த வழக்கு சைதாப்பேட்டை பெருநகர 4வது கோர்ட்டில் நடந்து வருகிறது. கடந்த 3ந் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது கோர்ட்டில் நேரில் ஆஜரான ஜெய் குற்றப்பத்திரிக்கை நகலை பெற்றுச் சென்றார்.
அப்போது மீண்டும் வழக்கு விசாரணை 5ந் தேதி (நேற்று) விசாரிக்கப்படும் அப்போது ஜெய் ஆஜராகி தன் சார்பு விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று நீதிபதி கூறியிருந்தார்.அதன்படி நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆனால் ஜெய் ஆஜராகவில்லை. இதையடுத்து ஜெய்யை கைது செய்து ஆஜர் படுத்தும் பிடிவாரண்ட் உத்தரவை நீதிபதி பிறப்பித்தார். இதைத் தொடர்ந்து இன்று அல்லது நாளை ஜெய் கோர்ட்டில் அஜராகலாம் என்று தெரிகிறது.
இல்லாவிட்டால் அவர் கைது செய்யபடுவது உறுதி என காவல்துறையினர் தெரிவித்திருகிறார்கள்.இதனால் ஜெய்யின் காதலி அஞ்சலி அச்சத்தில் உறைந்துள்ளர்.