தனது ரூட்டை மாற்றி வேற ரூட்டிற்கு போக துடிக்கும் விஜய் சேதுபதி…! இம்முடிவை ரசிகர்கள் ஏற்பார்களா…?
சென்னை : முன்னணி நடிகர்கள் பலரும் வருடத்திற்கு ஒரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறார்கள். அதனால் அவர்களது ரசிகர்கள் அந்தப் படங்களை அதிகமாக எதிர்பார்ப்பதோடு பெரிய ஓப்பனிங்கையும் கொடுத்து வருகிறார்கள்.
ஆனால், தற்போது முன்னணி நடிகராகிவிட்ட விஜய் சேதுபதி வருடத்திற்கு நான்கைந்து படங்களில் நடித்துவிடுகிறார். அதோடு, அவர் கெஸ்ட் ரோலில் நடித்த சில படங்களும் இவரது படங்களுக்கு இடையே அப்படங்களும் வெளியாகின்றன.
இதுகுறித்து விஜய் சேதுபதி கூறுகையில், எனக்கும் என் படம் எப்போது வரும் என்று ரசிகர்களை எதிர்பார்க்க வைக்கவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. ஆனால், நண்பர்களாக இருக்கும் இயக்குநர்களின் அன்புக்கிணங்க பல படங்களில் நடித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு வருகிறது.
என்றாலும், இந்த நிலையை இனிமேல் தொடர விடமாட்டேன். என் முகத்தை அடிக்கடி பார்த்தால் ரசிகர்களுக்கு போரடித்து விடும். ஏனென்றால் நான் சுமார் மூஞ்சி குமாரு என்பது எனக்குத் தெரியும்.
அதனால் இனிமேல் நானும் பட எண்ணிக்கையைக் குறைத்து ரசிகர்களை எதிர்பார்க்க வைக்கப்போகிறேன் எனக் கூறியிருக்கிறார் விஜய் சேதுபதி. இவர் தற்போது ‘சூப்பர் டீலக்ஸ்’, ’96’, ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’, ‘சீதக்காதி’, ‘ஜுங்கா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.