நடிகர் சியான் விக்ரம் மகள் திருமணம் திமுக தலைவர் மு.கருணாநிதி தலைமையில் கோபாலபுரத்தில் அவரது வீட்டில் நடைபெற்றது.
unknown nodeதிமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து-சிவகாம சுந்தரி அவர்களின் மகள் வழி பேரணும், கெவின்சேகர் நிறுவனத்தலைவர் சி.கே.ரங்கநாதன்-தேன்மொழி தம்பதியின் மகனுமான மனோரஞ்சித்துக்கும், நடிகர் விக்ரம்-சைலஜா தம்பதியின் மகள் அக்சிதாவுக்கும் திருமணம் நிச்சய்க்கபட்டது.
unknown nodeதிருமண வீட்டார் மட்டுமே கலந்துகொண்டனர். அரசியல் கட்சி சார்பாக யாரும் கலந்துகொள்ளவில்லை.
unknown nodeஇன்று காலை 10 மணிக்கு மணமக்கள் கருணாநிதியின் வீடிற்கு வந்தனர். அவர்களுக்கு மலை அணிவிக்கப்பட்டு வரவேற்கபட்டனர்.பிறகு 10.30 மணியளவில் அவர்கள் இருவருக்கும் கருணாநிதி தலைமையில் தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது.அதன்பின் வாசல் வரை கருணாநிதியை வீல்சேரில் அழைத்து சென்று பத்திரிக்கையாளர்களிடம் காண்பித்துவிட்டு திரும்ப கூப்பிட்டு சென்றனர்.
unknown nodeகருணாநிதி அவர்கள் கடந்த ஒரு வருடமாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஓய்வு எடுத்து வருவது குறிப்பிடதக்கது.