தனக்கு தானே வேட்டு.. பாலிவுட் நடிகர் கோவிந்தா காலில் பாய்ந்த துப்பாக்கிக்குண்டு.!
நடிகர் கோவிந்தா தனது வீட்டில் துப்பாக்கியை துடைத்துக்கொண்டிருந்தபோது, தவறுதலாக கை பட்டு குண்டு பாய்ந்ததாகக் கூறப்படுகிறது.

டெல்லி : பாலிவுட் நடிகர் கோவிந்தா தவறுதலாக தனது காலில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதில் காயமடைந்துள்ளார். இதனை தொடர்ந்து, அவரை மீட்ட உறவினர்கள் மும்பையின் க்ரிட்டிகேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதித்துள்ளனர்.
மும்பையில் உள்ள அவரது வீட்டில் இன்று அதிகாலை 4.45 மணியளவில் வெளியே செல்ல தயாராகி கொண்டிருக்கையில், உரிமம் பெற்ற ரிவால்வரை (துப்பாக்கி) துடைத்துக்கொண்டிருந்தபோது, தவறுதலாக கை பட்டு குண்டு பாய்ந்ததாகக் கூறப்படுகிறது.
இதில், அவரது காலில் துப்பாக்கிக்குண்டு ஆழமாக துளைத்துள்ளதாக தெரிகிறது. தற்பொழுது, அவரது காலில் இருந்து புல்லட் அகற்றப்பட்டு, கோவிந்தாவின் உடல்நிலை சீராக உள்ளது என நடிகரின் மேலாளர் தகவல் தெரிவித்தார்.
கோவிந்தா ஒரு நிகழ்ச்சிக்காக கொல்கத்தா செல்லவிருந்தாக பாலிவுட் சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.
90-களில் நகைச்சுவை தொடர்பான கதாபாத்திரங்கள் மற்றும் நடனத்திற்காக அவர் மிகவும் பிரபலமானவர். இந்த ஆண்டு மார்ச் மாதம் தனது அரசியல் களத்தில் ரீ என்ட்ரி கொடுக்கும் வகையில், சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே பிரிவில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
‘நிறைபுத்தரிசி’ பூஜை…சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு!
July 29, 2025
ஆபரேஷன் சிந்தூர் விவாதம் : இன்று மாலை பிரதமர் மோடி உரை?
July 29, 2025