நடிகர் அர்ஜுன் தாயார் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், காலமனார்.
மூத்த கன்னட நடிகர் சக்திபிரசாத்தின் மனைவியான மற்றும் நடிகர் அர்ஜுன் தாயாருமான லக்ஷ்மி (வயது 85 ) காலமனார். உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் அர்ஜுனின் தாயார் காலமானார். பெங்களூரில் உள்ள அர்ஜுனின் சொந்த ஊரான மதுகிரி அருகில் உள்ள ஜக்குநல்லியில் அஞ்சலிக்காக தாயாரின் உடல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், அர்ஜுனின் அப்பாவின் நினைவிடம் அருகேவே தாயின் உடலை நாளை நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.