நெற்றியில் தோட்டா,முகத்தில் இரத்தம்..! ரணகளமாக வெளியான மாநாடு பர்ஸ்ட் லுக் ..!

நடிகர் சிம்பு நடித்துள்ள மாநாடு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் சிம்பு நடித்துள்ள மாநாடு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் சிம்பு சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் “ஈஸ்வரன்” படத்தில் நடித்து முடித்து விட்டு , மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.சமீபத்தில் புதுச்சேரியில் நடந்து வந்த மாநாடு படத்தின் படப்பிடிப்பில் சிம்பு கலந்து கொண்டார்.

இதில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கலந்து கொண்டுள்ளனர் . வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தினை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார் .மேலும் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் .

மாநாடு படத்தில் சிம்பு இஸ்லாமிய இளைஞனான அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக அவரே கூறியிருந்தார். சமீபத்தில் மாநாடு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 21-ம் தேதி காலை 10.44 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவித்திருந்தனர்.அதன்படி தற்போது மாநாடு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.அதில் நெற்றியில் தோட்டா முகத்தில்  ரத்த வழிய தொழுகை செய்யும் சிம்புவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

unknown node