பிச்சைக்காரன்-2 படத்தை வெளியிடுவதற்குத் தடை கோரி மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பிச்சைக்காரன்-2 படத்தை இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி இயக்கி தானே நடிகராகவும் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருடன் காவ்யா தாபர், ரித்திகா சிங், மன்சூர் அலி கான், ராதா ரவி, ஜான் விஜய், தேவ் கில் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
படத்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்னீக் பீக் ட்ரைலர் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது. இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது படத்தை வெளியிடுவதற்குத் தடை கோரி சென்னை உயர்நிதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதில், தன்னுடைய கதையை பிச்சைக்காரன்-2 என்ற பெயரில் திரைப்படமாக எடுத்துள்ளாதாக உதவி இயக்குனர் பரணி வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், ஏற்கனவே, பிச்சைக்காரன் 2 படத்துக்கு தடை விதிக்கக்கோரி ராஜ கணபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்குடன் சேர்த்து இயக்குனர் பரணியின் வழக்கும் ஏப்ரல்-18 ம் தேதி விசாரிக்கப்பட உள்ளது.
தொடர்ந்து பிச்சைக்காரன் 2 படத்தின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதால் படம் வெளியாகுமா..? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.