ரத்தம் கொட்டிச்சு..'கரு கரு கருப்பாயி'பாடலுக்கு பின் இருக்கும் ரோஜாவின் வலிகள்!

அந்தப் பாடலைப் பார்க்கும் போதெல்லாம் என் முதுகில் ஏற்பட்ட அந்த ஆழமான காயம் மற்றும் ரத்தம் கொட்டிய தருணம்தான் நினைவுக்கு வரும் என ரோஜா தெரிவித்துள்ளார்.

Hero Image

சென்னை : 90-களின் காலகட்டத்தில் ரசிகர்களைக் கவர்ந்த சூப்பர் ஹிட் பாடல்களில் ஒன்று 'கரு கரு கருப்பாயி'. இந்தப் பாடலின் படப்பிடிப்பின் போது தனக்கு ஏற்பட்ட கடுமையான விபத்து மற்றும் அதனால் ஏற்பட்ட காயங்கள் குறித்து நடிகை ரோஜா ஒரு சமீபத்திய நேர்காணலில் உருக்கமாகப் பகிர்ந்துள்ளார்.

என்ன நடந்தது?

அந்தப் பாடலில் கயிறு கொண்டு இழுக்கப்படுவது போன்ற ஒரு முக்கியமான காட்சி படமாக்கப்பட்டது. அந்தக் காட்சிக்காக ரோஜா கழுத்தை ஒட்டியவாறு பிளவுஸ் அணிந்திருந்தார். காட்சி தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக அந்தச் சூழலில் படப்பிடிப்பு நடத்தப்பட்டபோது, எதிர்பாராதவிதமாக அந்தக் கயிறு அவரது தோள்பட்டையில் பட்டு, தோல் கிழிந்து ரத்தம் கொட்டியுள்ளது.

இந்த விபத்து குறித்து ரோஜா கூறுகையில், "ரத்தம் கொட்டிய போதும், அந்த வலி என்னைச் சற்றும் பாதிக்கவில்லை. அந்தச் ஷாட் திரையில் சிறப்பாக வரவேண்டும் என்பது மட்டுமே என் கவனமாக இருந்தது. ஒரு காட்சி படமாக்கப்பட்டுவிட்டால், அது 100 அல்லது 200 ஆண்டுகள் ஆனாலும் அழியாமல் திரையில் இருக்கும். எனவே, எனக்கு அடிபட்டாலும் சரி, காய்ச்சல் இருந்தாலும் சரி, படப்பிடிப்பு தளத்திற்கு வந்துவிட்டால் கேமராவுக்கு முன் எனது முழு அர்ப்பணிப்பை மட்டுமே கொடுப்பேன்," என்று தெரிவித்துள்ளார்.

அந்தப் பாடல் படப்பிடிப்பு அவருக்கு மிகப்பெரிய பாடத்தைக் கற்றுக்கொடுத்தது மட்டுமின்றி, இன்றும் அந்தப் பாடலைப் பார்க்கும் போதெல்லாம் தனது முதுகில் ஏற்பட்ட அந்த ஆழமான காயம் மற்றும் ரத்தம் கொட்டிய தருணம்தான் அவருக்கு நினைவுக்கு வரும் என்றும் அவர் உணர்ச்சிகரமாகக் குறிப்பிட்டுள்ளார்.

ரத்தம் கொட்டிச்சு..'கரு கரு கருப்பாயி'பாடலுக்கு பின் இருக்கும் ரோஜாவின் வலிகள்!