குட் பேட் அக்லி மெகா ஹிட்! ‘KGF’ யுனிவர்ஸில் இணையும் ரெட் டிராகன் அஜித்?
நடிகர் அஜித் யாஷுடன் இணைந்து கேஜிஎப் 3 திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தீயாக பரவி வருகிறது.

சென்னை : அஜித் ரசிகர்கள் பலரும் அவரிடம் எதிர்பார்க்கும் படங்கள் என்றால் மாஸான படங்கள் என்று சொல்லலாம். அப்படி எதிர்பார்த்த ரசிகர்களுக்காகவே அவர் தற்போது நடித்து முடித்து வெளியான படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் திரையரங்குகளில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பட்டையை கிளப்பி வருகிறது.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித் எந்த இயக்குனருடைய இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் நடிக்க போகிறார் என்கிற எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளது. அவர்களுக்காகவே இப்போது இன்னும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அஜித் கேஜிஎப் 3 படத்தில் நடிக்கவுள்ளதாக சூடான ஒரு தகவல் வைரலாகி கொண்டு இருக்கிறது. ஏற்கனவே, அவர் பிரசாத் நீல் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்தது.
ஆனால், அது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த சூழலில், தற்போது கிடைத்த தகவலின் படி அஜித் அடுத்ததாக கேஜிஎப் 3 படத்தில் நடிக்க தான் தயாராகி வருகிறாராம். தற்போது சில மாதங்கள் ஓய்வு எடுத்துவிட்டு அதன்பிறகு கேஜிஎப் 3 படத்தில் நடிக்கவிருப்பதாகவும் அவர் நடிக்கவுள்ள கேஜிஎப் 3 திரைப்படம் 2027-ஆம் ஆண்டு வெளியீட திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, கேஜிஎப் படத்திற்காக தெலுங்கு, ஹிந்தியில் மட்டுமின்றி தமிழிலும் பெரிய ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. ஏற்கனவே, படத்தின் இரண்டு பாகங்கள் வெளியாகி மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றிருந்தது. 2-வது பாகம் முடியும் போதே படத்தின் மூன்றாவது பாகமும் உருவாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே, அந்த மூன்றாவது பாகத்தில் அஜித்தும் யாஷுடன் நடிக்கவுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
புனேவில் இரும்பு பாலம் இடிந்து விழுந்து விபத்து – 6 பேர் உயிரிழப்பு.., 20 பேர் மாயம்.!
June 15, 2025
“அமெரிக்காவை தாக்கினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்” – ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை.!
June 15, 2025