அந்த படத்தை பார்த்து தான் கார்த்திக் சுப்புராஜ் ரெட்ரோ வாய்ப்பு கொடுத்தாரு! மனம் திறந்த பூஜா ஹெக்டே!
நடிகை பூஜா ஹெக்டே சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் ரெட்ரோ படத்தில் நடிப்பது குறித்து சில விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.

சென்னை : சூர்யா ரசிகர்களுடைய கவனம் முழுவதும் ரெட்ரோ படத்தின் மீது தான் இருக்கிறது. தரமான படங்களை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ் முதன் முதலாக இந்த படத்தின் மூலம் சூர்யாவுடன் இணைந்த காரணத்தால் படத்தின் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாக எழுந்துள்ளது. படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றது.
டீசரில் பூஜா ஹெக்டே சூர்யா ஜோடி பொருத்தம் பலரையும் கவர்ந்தது. இந்நிலையில், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த நடிகை பூஜா ஹெக்டே தனக்கு எப்படி சூர்யாவின் ரெட்ரோ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது என்பது பற்றி பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” ரெட்ரோவில் நான் மிகவும் வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறேன். தென்னிந்திய சினிமாவில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு கதாபாத்திரம் அது தான்.
ராதேஷ்யம் படத்தில் என்னுடைய உணர்ச்சிகரமான காட்சிகள் கார்த்திக்சுப்பராஜுக்குப் பிடித்திருந்ததால் நான் ரெட்ரோ படத்திற்கு சரியாக இருப்பேன் என எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அந்த காட்சிகளைப்பற்றி பேசவிட்டு இந்த படத்திலும் அவர் சில காட்சிகளை கூறினார். உடனடியாக நான் நடிக்க ஒப்புக்கொண்டேன். படம் சூப்பராக வந்துகொண்டு இருக்கிறது” எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், ரெட்ரோ படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தீவிரமாக இசையமைத்து கொண்டு வருகிறார். படத்தின் முதல் பாடல் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி கொள்கை விவகாரம் முதல்…டெல்லி நிலநடுக்கம் வரை!
February 17, 2025
சோலி முடிஞ்சு.. ரிஷப் பண்ட்டை பதம் பார்த்த ஹர்திக் பாண்டியா பந்து.!
February 17, 2025
மஜாபா..மஜாபா! ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம்! மதராஸி குட்டி டீசர் இதோ!
February 17, 2025
டெல்லியைத் தொடர்ந்து பீகாரிலும் மிதமான நிலநடுக்கம்!
February 17, 2025
வார தொடக்க நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு.!
February 17, 2025
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் – மூன்றாவது விமானம் இந்தியா வந்தடைந்தது.!
February 17, 2025
ஐபிஎல் 2025 : மும்பை இந்தியன்ஸ் அட்டவணை இதோ!
February 17, 2025