அனிருத் இல்லாமல் படம் இல்லயென சொன்ன லோகேஷ்! கைதி 2-வுக்கு சாம் சி எஸ் கொடுத்த ரியாக்சன்!

கைதி 2 திரைப்படத்திற்கு இசையமைக்க தான் விருப்பப்படுவதாக இசையமைப்பாளர் சாம் சி எஸ் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

sam cs Kaithi 2

சென்னை :தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இல்லாமல் தான் எந்தப் படமும் இயக்க மாட்டேன் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். SSVM Transforming நிகழ்ச்சியில் மாணவர்களிடையே பேசிய லோகேஷ், “நான் அனிருத் இல்லாமல் படம் பண்ண மாட்டேன். ஒருவேளை எங்கள் இருவரில் ஒருவர் சினிமாவை விட்டு விலகினால், அதன் பிறகு பார்க்கலாம்,” என்று கூறினார்.

லோகேஷ் மற்றும் அனிருத் இணைந்து மாஸ்டர், விக்ரம்’, ‘லியோ’, மற்றும் ‘கூலி’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை வழங்கியுள்ளனர். அனிருதின் பின்னணி இசையும், பாடல்களும் லோகேஷின் படங்களுக்கு தனித்துவமான முத்திரையை பதித்துள்ளன. “அனிருத் எனது படங்களின் உயிர்நாடி. அவருடைய இசை இல்லாமல் எனது கதைகள் முழுமையடையாது,” என்று லோகேஷ் தனது பேட்டியில் மேலும் தெரிவித்தார்.

இந்த கூட்டணி, 2026-ல் வெளியாகவுள்ள ‘கைதி 2’ மற்றும் ‘விக்ரம் 2’ படங்களிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இருப்பினும் கைதி படத்தின் முதல் பாகத்திற்கு இசையமைப்பாளர் சாம்சிஎஸ் தான் இசைமைத்திருந்தார். அந்த படத்தில் பாடல்கள் இல்லையென்றாலும் கூட படத்தின் பின்னணி இசையை வேற லெவலில் கொடுத்திருப்பார்.

எனவே, கைதி 2 படத்திற்கும் அவர் தான் இசையமைக்கவேண்டும் என்பது ரசிகர்களுடைய ஆசையாக இருந்து வருகிறது. இருப்பினும் லோகேஷ் கனகராஜ் இனிமேல் தான் அனிருத் இல்லாமல் படம் செய்யமாட்டேன் என கூறியிருப்பதால் ஒரு வேலை கைது 2வுக்கு இசையமைப்பாளர் அனிருத் தானோ என ஒரு பக்கம் விவாதம் ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படியான சூழலில், இது குறித்து இசையமைப்பாளர் சாம்சிஎஸ் பேசியுள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசிய அவர் ” கைதி 2 படத்திற்கு நான் தான் இசையமைப்பேன் என்று லோகேஷ் முன்னதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார். என்னிடமும் ஏற்கனவே நாம் இருவரும் சேர்ந்து பண்ணலாம் என சொல்லியிருக்கிறார். எனவே, என்ன நடக்க போகிறது என்பதை அவரும் படத்தின் தயாரிப்பாளர் தான் முடிவு செய்யமுடியும். நான் இந்த படத்திற்கு இசையமைக்கவில்லை என்றால் வேறு இசையமைப்பாளர்கள் இசையமைப்பார்கள் அவர்களும் சிறப்பாக தான் செய்வார்கள்.

ஆனால், எனக்கு கைதி 2 படத்திற்கு இசையமைக்கும் ஆர்வம் அதிகமாக இருக்கிறது. எனக்கு அந்த படத்திற்கான வாய்ப்பு கிடைத்தது என்றால் நிச்சயமாக சிறப்பாக செய்வேன். எனக்கு என் மீது நம்பிக்கை அதிகமாக இருக்கிறது. எனவே, பொறுத்திருந்து பார்ப்போம்” எனவும் சாம்சிஎஸ் தெரிவித்துள்ளார்.