நாளை மறுவெளியீடாக திரையரங்குகளுக்கு வரும் ‘மங்காத்தா’ திரைப்படம், ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜித் குமார், அர்ஜுன் சர்ஜா, திரிஷா ஆகியோர் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கிய இப்படத்தின் டிக்கெட் புக்கிங் மிக அமோகமாக நடைபெற்று வருகிறது. படத்தின் மறுவெளியீட்டை முன்னிட்டு பல சுவாரஸ்ய தகவல்கள் இப்போது வெளிவந்துள்ளன.
‘மங்காத்தா’ என்றாலே ரசிகர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது விநாயக் மகாதேவன் கதாபாத்திரம்தான். அஜித் குமார் அந்த வில்லத்தனமான, சுயநலமான கேரக்டரில் மிரட்டலாக நடித்திருந்தார். ஆனால் அதே அளவுக்கு பேசப்பட்ட மற்றொரு கதாபாத்திரம் – அர்ஜுன் சர்ஜா நடித்த பிரித்திவ் கதாபாத்திரம்தான்.இந்த படத்தின் கதையை எழுதும்போதே இயக்குநர் வெங்கட் பிரபு, அஜித் – விஜய் இருவரையும் மனதில் வைத்துத்தான் ஸ்கிரிப்ட்டை வடிவமைத்தாராம்.
விநாயக் கதாபாத்திரம் – அஜித்க்கும், பிரித்திவ் கதாபாத்திரம் – விஜய்க்கும் என்று ஆரம்ப திட்டம் இருந்தது.ஆனால் அந்த சமயத்தில் விஜய்க்கு தொடர் பிசி இருந்தது. அவருக்கு முழுக்க மாஸ் பில்டப் கொடுக்கும் கேரக்டர்தான் முக்கியம் என்ற நிலைப்பாட்டில் இருந்தார். ‘மங்காத்தா’வில் மாஸ் காட்சிகள் பெரும்பாலும் அஜித்துக்கே என்பதால், விஜய் இந்த கதையை ஏற்க மாட்டார் என்று இயக்குநர் வெங்கட் பிரபு நினைத்தார்.
அதனால் விஜய்க்கு கதை சொல்லாமலேயே அர்ஜுனிடம் கதை சொல்லி, பிரித்திவ் கேரக்டரில் அவரை நடிக்க வைத்தார்கள்.படம் ரிலீஸ் ஆன பிறகு நடந்த சுவாரஸ்ய சம்பவம்: ‘மங்காத்தா’வை பார்த்த விஜய், இயக்குநர் வெங்கட் பிரபுவை தனது வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்து படத்தை மனதார பாராட்டினாராம். அப்போது வெங்கட் பிரபு “பிரித்திவ் கேரக்டரில் உங்களை வைத்து எடுக்கலாம்னு நினைச்சேன்” என்று சொன்னாராம். அதற்கு விஜய் “முதலில் என்னிடம் சொல்லியிருந்தா, நானே இந்த படத்தில் நடித்திருப்பேன்” என்று பதிலளித்தாராம்.
இந்த சுவாரஸ்ய தகவல்கள் ‘மங்காத்தா’ மறுவெளியீட்டை மேலும் சுவாரஸ்யமாக்கியுள்ளன. ரசிகர்கள் மத்தியில் இந்த பழைய கதை மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. நாளை திரையரங்குகளில் மீண்டும் ‘மங்காத்தா’வை பார்க்கும் ரசிகர்கள், இந்த பின்னணி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
