அவெஞ்சர்ஸ் என்ட் கேம் படத்திற்காக கூகுள் நிறுவனம் செய்த வேலையை பாருங்கள் வீடியோ இதோ

This news gives information about Check out the work done by Google's company for Avengers End Game

ஹாலிவுட் திரைப்படத்தில் கடைசியாக “அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்” திரைப்படம் உலக அளவில் ரசிகர்களிடம்  நல்ல வரவேற்பையும் , சிறந்த வசூலையும் பெற்றது. இந்நிலையில் தற்போது “அவெஞ்சர்ஸ் என்ட் கேம்”என்ற பெயரில் திரைப்படம் வெளியாகியது.

இப்படம்  தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகி உள்ளது. இந்தியா முழுவதும் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படம் மிகப்பிரமாண்டமாக வெளியாகி உள்ளது. இந்தியதிரைப்படங்களை  விட இப்படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

இப்படத்தில் தானோஸ் என்ற கதாபாத்திரம் தான் வில்லன்.இந்நிலையில்  தானோஸ் ஒரு சொடக்கு போட்டு உலகத்தில் உள்ள பாதி மக்களை அழித்து விடுவான்.

தற்போது கூகுளில் “Thanos” என டைப்  செய்தால் ஓரத்தில் ஒரு கை இருக்கும். அந்த கையை கிளிக் செய்தால், கூகுள் தகவல்கள் மறையத்தொடங்கி விடும்  பிறகு மீண்டும் கிளிக் செய்தால் தகவல்கள் அனைத்தும் வந்து விடும் .

இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக கூகுள் நிறுவனம் இது போன்று செய்து உள்ளது.

https://media.dinasuvadu.com/uploads/2019/04/WhatsApp-Video-2019-04-26-at-9.48.13-PM.mp4