இது எப்போ ’வடிவேலு ’உலக புகழ் நேசமணி ஆனது எப்படி ? ஒரு பார்வை

வடிவேலு என்று சொன்னதுமே இனம்புரியாத ஒரு சிரிப்பு ஏற்படும். சமீப காலமாக வடிவேலு எனும் பெருங்கலைஞனுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டுவருவது வேதனைக்குரியதாகும்.

வடிவேலு என்று சொன்னதுமே இனம்புரியாத ஒரு சிரிப்பு ஏற்படும். சமீப காலமாக வடிவேலு எனும் பெருங்கலைஞனுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டுவருவது வேதனைக்குரியதாகும்.

ஆரம்ப காலத்தில் நடிகர் ராஜ்கிரன் சினிமாவில் விநியோகஸ்தராக இருந்து ஒரு ஹிட் படம் கொடுத்து தமிழ் ரசிகர்கள் நெஞ்சத்தில் சிம்மாசனம் இட்டுக்கொண்டிருந்த போது, ஓரு நண்பரின் திருமணத்துக்காக மதுரைக்குச் சென்றுள்ளார். அப்போது அவருக்கு ஒரு பேச்சுத்துணையாக இருக்கும் பொருட்டு அந்த நண்பர் , ராஜ்கிரனுக்கு அறிமுகப்படுத்திய நபர்தான் வடிவேலு.

unknown node

அதனையடுத்து பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் காமெடியனாக நடித்து வந்தார். கடந்த 2001 ஆம் ஆண்டு மலையாள இயக்குநர் சித்திக் இயக்கிய ஃபிரண்ட்ஸ் படத்தில் ஹீரோவாக விஜய் நடித்தார்.இதில் நேசமணி கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்தார்

unknown node

இதுதான் தற்போது டுவிட்டரில் மோடியையே மிஞ்சுகிற அளவு டிரெண்டிங் ஆகியுள்ளது. அதன்பின்னர் எண்ணற்ற படங்களில் நடித்திருந்தாலும் வின்னர் படத்தில் நடித்த ’கைப்புள்ள ’கதாப்பாத்திரத்தை யாராலும் மறக்கமுடியாது . அவர் ஹீரோவாக நடித்து முன்னணி நடிகர் நடித்த படம் அளவுக்கு மக்களிடம் ரீச் ஆன இம்மை அரசன் 23 ஆம் புலிகேசி ’படமும்  தமிழ் சினிமா உள்ளவரை வடிவேலுவை நினைவில் வைத்திருக்கும்

unknown node

தற்போது வடிவேலுவின் மறுவருக்கைக்காக எத்தனை ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் என்பதையே அண்மைய நேசமணி டிரெண்ட் வலியுறுத்துகிறது எனலாம்.