விஜய் சர்காரை தொடர்ந்து ‘ தளபதி 63 ‘ படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ஜிஎஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கிறார். மேலும் இந்த படத்தை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிறார்கள். மேலும் அட்லீ மீண்டும் விஜய்யுடன் இணைந்து இந்த படத்தை இயக்குகிறார்.
மேலும் இந்த படத்தில் விளையாட்டு வீரரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்க இருக்கிறார்கள். இந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு விஜய் தனது உடல் அமைப்பை மாற்றி வருகிறார். பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த கதிர் இந்த படத்தில் நடிக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது ஜிஎஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ச்சனா கல்பாத்தி ‘ தளபதி 63 ‘ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.