ஒரே போன்காலில் 11பெண்களை காப்பாற்றிய தளபதி விஜய்.!

தளபதி விஜய் ஒரே போன்காலில் 11பெண்களை காப்பாற்றியுள்ளார்.

தளபதி விஜய் ஒரே போன்காலில் 11பெண்களை காப்பாற்றியுள்ளார்.

சென்னையை சேர்ந்த தேவிகா உட்பட அவரது குடம்பத்தை சேர்ந்த 11பெண்கள் திருமணம் ஒன்றில் கலந்து கொள்ள தூத்துக்குடிக்கு வந்துள்ளனர். அப்போது திடீரென ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அவர்களால் ஊருக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதனையடுத்து  கைகளில் இருந்த காசுகள் அனைத்தையும் செலவாக்கிய இவர்கள் பேருந்து நிலையங்களிலும், கோவில்களிலும் தங்கியிருந்து நாட்களை கழித்து வந்தனர். அதனையடுத்து சாப்பாட்டுக்கே வழியில்லாமல் திண்டாடிய இவர்கள் தூத்துக்குடியில் உள்ள விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவரை சந்தித்து தங்களது மோசமான நிலையை எடுத்து கூறினார்கள்.

அதனையடுத்து உடனடியாக அவர் அகில இந்திய விஜய் ரசிகர் தலைவரான பிஸி ஆனந்த் அவர்களை தொடர்பு கொண்டு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக இந்த தகவல் விஜய் அவர்களிடம் சென்றடைய, அவர் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் உள்ள விஜய் ரசிகர் மற்ற நிர்வாகிகளை போனில் தொடர்பு கொண்டு அந்த 11 பெண்களையும் சென்னைக்கு பத்திரமாக அனுப்பி வைக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். அதனையடுத்து தேவிகா உட்பட அந்த 11 பெண்களையும் அரசின் அனுமதியுடன் சென்னைக்கு அழைத்து சென்றனர். பின்னர் அவர்கள் அனைவரையும் அவரவர் வீட்டில் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டது. ஒரே போன்காலில் 40 நாட்கள் வரை கஷ்டப்பட்டு வந்த 11பெண்களை விஜய் காப்பாற்றிய செய்தி சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.