பிரபுதேவா ரசிகர்களுக்கு மரண மாஸ் அப்டேட்.!

பிரபு தேவாவின் 54 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபு தேவாவின் 54 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் மற்றும் நடன இயக்குனரான பிரபுதேவா தற்போது இயக்குனர் ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பஹீரா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த திரைப்படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்க ப்படுகிறது. பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள பொன் மாணிக்கவேல் விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக பிரபுதேவா  இருட்டு அறையில், முரட்டு குத்து படத்தை இயக்கிய இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

இந்த திரைப்படத்தில் பிரபுதேவாவுடன் நடிகை, ரைசா வில்சன், வரலட்சுமி சரத்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கவுள்ளார்.

இந்த நிலையில், தற்போது இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

பிரபுதேவா ரசிகர்களுக்கு மரண மாஸ் அப்டேட்.!