ஆஸ்திரேலிய நடிகை கார்மென் டன்கன் புற்றுநோயால் மரணமடைந்துள்ளார்.
ஆஸ்திரேலிய நடிகை கார்மென் டன்கன் சர்வதேச படங்கள் பலவற்றில் நடித்துள்ளார். 2008 மும்பை தாக்குதல் தொடர்பான, ஹோட்டல் மும்பை படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த சில நாட்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவருக்கு வயது 76.
இதனையடுத்து, இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரின் மறைவு சர்வதேச அளவில் ரசிகர்களை பாதித்துள்ளது.