நடிகர் ஜெயம்ரவி கோலிவுட் சினிமாவில் உள்ள இளம் நாயகன். இவர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி “கோமாளி’ படம் திரைக்கு வந்தது.அந்த படம் இவருடைய கேரியரில் முக்கிய படமாக அமையும் அளவிற்கு இவருக்கு மிக பெரிய வெற்றியை பெற்று கொடுத்தது.
வசூல் ரீதியாக இந்த படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது.இந்நிலையில் நடிகர் ஜெயம்ரவி மீது தற்போது சென்னையில் உள்ள தேனாம் பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுக்க பட்டுள்ளது.
அந்த புகாரில் நடிகர் ஜெயம்ரவி தனக்கு பாதுகாப்பு அளித்து வந்த தனியார் பாதுகாவலர்களுக்கு சம்பளம் கொடுக்க வில்லை என்றும் இது குறித்து ஜெயம்ரவியின் உதவியாளர் மீது போலீசில் புகார் கொடுக்க பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.இது குறித்து தேனாம் பேட்டை போலீசார் விரைவில் ஜெயம்ரவியிடம் இது குறித்து விசாரணை நடத்துவார்கள் என்றும் கூறப்படுகிறது.