கர்ணன் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த தனுஷ்.!

It has been announced that the dubbing work of the upcoming Karnan film starring Dhanush is almost over.

தனுஷ் நடிப்பில் உருவாகவுள்ள கர்ணன் படத்தின் டப்பிங் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் கர்ணன். நடிகை ரெஜீஷா விஜயன் இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, லால் மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.

இதன் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.ஏப்ரல் மாதத்தில் திரைக்கு கொண்டு வர உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது கர்ணன் படத்தின் டப்பிங் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் தனுஷ் டப்பிங் செய்வது போன்ற புகைப்படத்துடன் பகிர்ந்து தெரிவித்துள்ளார்.விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

unknown node